???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மருமகனை கொல்ல ரூ. 1.5 கோடி தந்த மாமனார்: தெலங்கானா ஆணவக்கொலையின் உச்சம்!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   19 , 2018  00:25:01 IST


Andhimazhai Image
தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரியாலகுடாவைச் சேர்ந்தவர் மாருதிராவ். அந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது ஒரே மகள் அமிர்தவர்ஷினி. ஹைதராபாத்தில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் மிரியாலகுடாவைச் சேர்ந்த பிரணாய் நாயக் என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
 
கடந்த வாரம் விநாயக சதுர்த்தியின் போது பிரணாய், அமிர்தவர்ஷினியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். மருத்துவ பரிசோதனை முடிந்து இருவரும் வெளியே வந்தபோது, பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத நபர், பிரணாயின் தலையில் அரிவாளால் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே பிரணாய் இறந்தார். அதிர்ச்சியில் உறைந்தார் கர்ப்பிணியான அமிர்தவர்ஷினி. அமிர்தவர்ஷினி அளித்த தகவலின் அடிப்படையில் அமிர்தவர்ஷினியின் தந்தை மாருதிராவை போலீசார் கைது செய்தனர்.
 
மாருதிராவ் தகவலின்படி, பீகார் மற்றும் ஹைதராபாத்தில், மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், தனது மகள் அவரை விட அந்தஸ்தில் குறைவான பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்தது பிடிக்காததால், கூலிப்படை மூலம் மருமகனைக் கொலை செய்ததாக மாருதிராவ் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், தன் மகளின் மகிழ்ச்சியைக் காட்டிலும் தனக்கு சாதியும் அந்தஸ்தும்தான் முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.
 
இந்தக் கொலைக்காக, ஒன்றரைக் கோடி ரூபாய் தருவதாகக் கூறி, 50 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவிலேயே மிக அதிக தொகைக்காக நடந்த ஆணவக்கொலையாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
தன் அன்புக் கணவரின் கொலைக்குக் காரணமாக இருந்த சாதியை எதிர்த்து போராட இருப்பதாக தெரிவித்துள்ளார் அமிர்தவர்ஷினி.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...