சிம்பு, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ படத்தில் டீஜே அருணாச்சலம், மனுஷ்யபுத்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘அசுரன்’ படத்தின் மூலம் பிரபலமான டீஜே அருணாச்சலம் தற்போது ‘பத்து தல’ படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். அவருடன், கவிஞரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரனும் இணைந்து நடிக்கிறார். மனுஷ்யபுத்திரன், இந்தப் படத்தில் உதயமூர்த்தி என்ற சமூக செயற்பாட்டளர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் கிருஷ்ணா இயக்கும் ‘பத்து தல’ படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.