???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடையில்லை: நீதிமன்றம் திட்டவட்டம்!

Posted : வெள்ளிக்கிழமை,   மே   31 , 2019  01:15:13 IST

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும், ஆசிரியர் தகுதிச் சான்று ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்று விதி உள்ளது. அதே போல, 150 மதிப்பெண்களுக்கான தேர்வில், பிரதான பாடத்தில் இருந்து 30 சதவீத மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படும் என்றும் விதி உள்ளது. மேலும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண்கள் விலக்கு வழங்கப்படும் எனவும் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளன.

இந்நிலையில், வருகிற ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நெட், ஸ்லெட் போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்று ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என அறிவித்துள்ளது சட்டவிரோதமானது என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார். அப்போது, பிரதான பாடத்திற்கு குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் மதிப்பெண்கள் நிர்ணயிக்காவிட்டால், பிரதான பாடத்தில் ஒரு மதிப்பெண் கூட எடுக்காதவர்கள் ஆசிரியர்களாகி விடுவர் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து அரசுத் தரப்பில், 1500 ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதாமல் உள்ளனர். என்றும், லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுத காத்திருப்பதாலும், தேர்வுக்கு தடை விதிக்க கூடாது என வாதிடப்பட்டது. அதேபோல, கேள்வித்தாள் எப்படி அமைய வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்கள் தீர்மானிக்க முடியாது எனவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத்தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்து, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...