???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்! 0 கர்நாடக தேர்தல்: முதல்வர் சித்தராமையா வேட்புமனுத் தாக்கல் 0 நிர்மலாதேவி விவகாரத்தில் CBI விசாரணை தேவை: வைகோ 0 எஸ்வி.சேகரின் கருத்து, அருவருக்கத்தக்கது: கனிமொழி 0 எச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: மத்திய அரசு பரிசீலனை 0 சிவகார்த்திகேயன் படத்தில் இரண்டாவது காமெடியனாக களமிறங்கும் யோகி பாபு 0 குஜராத் கலவர வழக்கு: முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி விடுதலை! 0 அவதூறு கருத்துகள் பரப்பும் எச்.ராஜா மீது வழக்கு தொடரப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் 0 பேராசிாியை நிா்மலா தேவியை ஐந்து நாள் சி.பி.சி.ஐ.டி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0 கியூபாவின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு! 0 ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட விஜயகாந்த், தே.மு.தி.க.வினர் கைது! 0 பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்! 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு! 0 ஆறாவது ஐ.பி.எல் சதம் : கெத்து காட்டிய கெயில்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டாடா குழும குழப்பம்: மிஸ்த்ரி நீக்கத்துக்கு என்ன காரணம்?

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   26 , 2016  01:34:36 IST


Andhimazhai Image
டாடா குழுமத் தலைவராக சைரஸ் மிஸ்த்ரி கடந்த 2012-ல் நியமிக்கப்பட்டார். டாடா குடும்பத்துக்கு வெளியில் இருந்து அந்த குழுமத்தின் தலைவராகப் பதவியேற்ற முதல் நபர் என்ற பெருமையுடன் சைரஸ் மிஸ்த்ரி அந்த பதவியை ஏற்றுக் கொண்டார். வணிக-பொருளாதார இதழ்கள் ரத்தன் டாட்டாவின் பெருந்தன்மை குறித்து மாய்ந்து மாய்ந்து எழுதின.
 
கடந்த 4 ஆண்டுகளாக டாடா குழுமத்தின் தலைவராக மிஸ்த்ரி எடுத்த முடிவுகள் ரத்தன் டாடாவுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நஷ்டத்தில் இயங்கும் பிரிட்டன் உருக்காலையை மூட சைரஸ் மிஸ்த்ரி எடுத்த முயற்சிகள் ரத்தன் டாடாவிடம் மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜப்பான் தொலைதொடர்பு நிறுவனமான டோகோமோவுக்கு எதிரான வழக்கில் டாடா நிறுவனத்துக்கு ஏற்பட்ட பின்னடைவே சைரஸ் மிஸ்த்ரி-ரத்தன் டாடா இடையிலான கருத்து வேறுபாடு ஆழமாக ஒரு காரணம்.
 
மேலும், நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை லாபத்தை நோக்கி திருப்பாமல் விற்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட மிஸ்திரியின் போக்கு ரத்தன் டாடாவுக்குப் பிடிக்கவில்லை என்கிறார்கள் பொருளாதார பத்திரிகையாளர்கள். இதேபோல டாடா குடும்பத்துக்குச் சொந்தமான நகைகளை மிஸ்த்ரி விற்க முயன்றதாகவும், ஜாகுவார் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் மிஸ்த்ரி மீது வைக்கப்பட்டுள்ளது.ரத்தன் டாடாவின் ஆசியுடன் பதவியேற்ற மிஸ்த்ரி குடும்பத்தினர் வசம் டாடா குழுமத்தின் 18 சதவீத பங்குகள் இருக்கிறது.
 
ரத்தன் டாடா - சைரஸ் மிஸ்த்ரி இடையிலான கருத்து வேறுபாடுகள் முற்றிய நிலையில் மும்பையில் கூடிய டாடா குழும இயக்குனர்கள் கூட்டத்தில் மிஸ்த்ரியை பதவி நீக்கம் செய்வதாக திங்கள்கிழமை முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, டாடா குழுமத்தின் இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடாவை நியமிக்கவும் அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அடுத்த 4 மாதங்களுக்கு ரத்தன் டாடா அந்த பதவியை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
 
இந்தநிலையில், டாடா குழுமத் தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து சைரஸ் மிஸ்த்ரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். முன்னதாக, சைரஸ் மிஸ்த்ரியின் பதவி நீக்கத்துக்குத் தடை விதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் டாடா குழுமம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...