அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   22 , 2021  09:57:49 IST

தஞ்சை பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரபிரியா, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் முதுகெலும்பாக டாஸ்மாக் மதுக்கடைகளின் வருமானம் உள்ளது. அங்கு விற்பனையாகும் மதுபானத்திற்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் நிர்ணய விலையை விட கூடுதலாக 10 ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. மதுக்கடைகளில் போலி மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. கோர்ட்டு உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளில் ரசீது வழங்கப்பட வேண்டும்.
 
 
ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு மதுக்கடையிலும் ரசீது வழங்கப்படுவதில்லை. மதுபானத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூல் செய்வதை தடுக்கவும், கணினிமயமாக்கப்பட்ட ரசீது வழங்கவும், போலி மது விற்பனையை தடுக்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'மதுபான கடைகளின் விதிமுறைப்படி அங்கு விற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் ரசீது கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இதை முறைப்படி விற்பனை பிரதிநிதிகள் கடைப்பிடிப்பதில்லை. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்களும், வழக்குகளும் வருகின்றன. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் மது பானங்களுக்கு கண்டிப்பாக உரிய ரசீது வழங்க வேண்டும்.
 
மதுபான விலைப்பட்டியல் ஒவ்வொரு கடையின் முன்பு அனைவருக்கும் தெரியும்படி வைக்க வேண்டும். விற்பனை ரசீதுக்கான ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். இது முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று ஒவ்வொரு கடையிலும் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கோர்ட்டு உத்தரவுகளை பின்பற்றாத விற்பனை பிரதிநிதிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இந்த உத்தரவு குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக கோர்ட்டு உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். சுற்றறிக்கை அனுப்பியதற்கான ஆவணங்களையும், இது சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 6-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...