![]() |
தஞ்சாவூரில் பேருந்து மீது மின்கம்பி உரசி 5 பேர் உயிரிழப்புPosted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 12 , 2021 20:36:13 IST
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே பேருந்து மீது மின்கம்பி உரசியதில், மின்சாரம் தாக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கல்லணையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி கணநாதன் என்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. வரகூர் அருகே முன்னாள் சென்ற லாரியை முந்துவதற்கு முயற்சித்தபோது சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. அப்போது திடீரென பேருந்து மீது உயர் அழுத்த மின்கம்பி உராய்ந்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி, பேருந்தில் பயணித்த பெண் உட்பட 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10 பேர், திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
|
|