???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை! 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழ்நாடு உதயமான நாளை தமிழக வளர்ச்சி நாளாக கடைபிடிக்கும் சிபிஎம்!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   31 , 2019  01:05:33 IST


Andhimazhai Image

தமிழ்நாடு உதயமான நாளை தமிழக வளர்ச்சி நாளாக கொண்டாட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது. இந்த நாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு:

 

’ நவம்பர் 1 தமிழ்நாடு மாநிலம் உதயமான தினம். இந்த நாளை தமிழ் வளர்ச்சி நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாட முடிவு செய்துள்ளது. அன்று தமிழகம் முழுவதும் தமிழ், தமிழர், தமிழக வளர்ச்சியை முன்னிறுத்தி கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

 

விடுதலைப் போராட்ட காலத்திலேயே மொழி வழி மாகாணங்கள் என்ற கோரிக்கை முன்னுக்கு வந்தது. இதை முன்னெடுத்துச் சென்றதில் கம்யூனிஸ்டுகளுக்கும் முக்கிய பங்கு உண்டு.

 

நாடு விடுதலைப் பெற்ற பிறகு மொழிவழி மாகாணம் அமைக்க மறுத்த நிலையில், மொழிவழி மாநிலங்கள் அமைவதுதான் தேசிய இனங்களின் தனித்தன்மையை பாதுகாக்கவும், அனைத்து மொழிகளும் சமச்சீரான வளர்ச்சி அடையவும், இந்தியாவின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படவும் பொருத்தமாக இருக்கும் என்று அழுத்தமாக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள். இப்போராட்டங்களில் தடியடிகளையும், தாக்குதல்களையும், வழக்குகளையும் சந்தித்தவர்கள்.

 

மாநில மறுசீரமைப்பு கமிஷனில் இதற்காக நாடு முழுவதும் கோரிக்கை மனுக்களை அளித்தது கம்யூனிஸ்ட் கட்சி. இந்தப் பின்னணியில்தான் 1956 ம் ஆண்டு மொழிவழி மாநில அடிப்படையில் சென்னை மாகாணம் உதயமானது.

 

சென்னை மாகாணம் அமைக்கப்பட்ட பின்னரும் அதற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட மறுத்துவிட்ட நிலையில், இதற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான திருத்த மசோதாவை முன்மொழிந்தவர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தி. இத்தகைய போராட்டத்திற்கு பின்னரே 1969ம் ஆண்டு அண்ணா அவர்களால் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 

ஆனால், இன்றைக்கு மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மொழிவழி மாநிலங்கள் என்ற கட்டமைப்பை சிதைத்து வருகிறது. அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்ட மத்திய அரசு, அதிகாரங்கள் பறிக்கப்பட்ட பலவீனமான மாநில அரசுகள் என்ற நிலை ஏற்படுத்தப்படுகிறது. கல்வி, சுகாதாரம், நிதி ஆதாரம் என அனைத்திலும் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு, அனைத்து அதிகாரங்களும் மத்தியில் குவிக்கப்படுகின்றன.

 

அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக மாற்றுவதற்கு பதிலாக, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் வம்படியாக திணிக்கப்படுகின்றன.

 

தமிழ்மொழியின் தொன்மைக்கு கீழடி போன்ற அகழ்வாய்வுகள் சாட்சி சொல்கின்றன. அனைத்துத் துறைகளிலும் அன்னைத் தமிழை அரியணை ஏற்றவும், மொழி வழி மாநில கட்டமைப்பு பாதுகாக்கப்படவும், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை பெறவும், பயிற்று மொழி மற்றும் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வரவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்த உள்ள விரிவானதொரு பிரச்சார இயக்கத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

 

தமிழகம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தலைவர்கள் விவரம்

 

1  திருவள்ளூர்             கே. பாலகிருஷ்ணன்           ப.சுந்தரராசன்

 

2              காஞ்சிபுரம்                அ. சவுந்தரராசன்

 

3              திருவண்ணாமலை         கே. சாமுவேல்ராஜ்

 

4              விழுப்புரம் வடக்கு            கே.பாலகிருஷ்ணன்

 

5              விழுப்புரம் தெற்கு              பேரா.ப.செல்வகுமார்

 

6              கடலூர்           ஜி. ராமகிருஷ்ணன்

 

7              திருவாரூர்  வி. மாரிமுத்து

 

8              நாகப்பட்டிணம்     எஸ்.ஜி. ரமேஷ்பாபு

 

9              திருச்சி புறநகர்      ஏ. லாசர்,    எஸ்.ஸ்ரீதர்

 

10           கரூர்  டி. ரவீந்திரன்

 

11           பெரம்பலூர்               எம். சின்னதுரை

 

12           நாமக்கல்     என். நன்மாறன்

 

13           சேலம்             ஜி. ஆனந்தன்

 

14           கிருஷ்ணகிரி           சு.பொ.அகத்தியலிங்கம்

 

15           கோவை        கவிஞர் ந.முத்துநிலவன்

 

16           தேனி                மதுக்கூர் ராமலிங்கம்

 

17           மதுரை புறநகர்      ச. தமிழ்ச்செல்வன்

 

18           மதுரை மாநகர்      சு. வெங்கடேசன், எம்.பி.,

 

19           விருதுநகர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன்

 

20           சிவகங்கை                ஐ. வி.நாகராஜன்

 

21           இராமநாதபுரம்      எஸ். பி.ராஜேந்திரன்

 

22           தூத்துக்குடி               உ. வாசுகி

 

23           திருநெல்வேலி     மதுக்கூர் ராமலிங்கம்

 

24           கன்னியாகுமரி      எஸ். நூர்முகமது,   என்.குணசேகரன்’

 

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...