???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கை

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   05 , 2019  07:49:25 IST


Andhimazhai Image

திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அழகிரி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

 

திராவிட முன்னேற்ற கழகத்தின் அணி செயலாளராக திரு.உதயநிதி ஸ்டாலின்  அவர்களை திமுக கழகத்தின் தலைவர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்கள் நியமித்திருப்பது மிகுந்த வரவேற்பையும், மகிழ்ச்சியையும் தருகிறது. கடந்த 30  ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் இளைஞரணி செயலாளராக பணியாற்றி பல சாதனைகளை படைத்தவர் தி. மு. க. ஸ்டாலின். இதன் மூலம் அவர் தமிழக அரசியலில் படைத்த சாதனைகளை போல திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களும் செயல்படுவார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது.


 

திரைப்படத்துறையில் பல படங்களில் சிறப்பாக நடித்த, தமிழ் சமுதாயத்திற்கு நன்கு அறிமுகமான அவர், திமுக இளைஞர் அணி செயலாளராக நியமித்திருப்பதன் மூலம் இளைய சமுதாயத்தினரை ஈர்க்கக் கூடிய வாய்ப்பு அவருக்கு  கொடுக்கப்படிருப்பது மிகப் பெருத்தமானதாகும். சரியான நேரத்தில் சரியான பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றிருக்கும்  திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.

இவ்வாறு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...