???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்துக்கு வாய்ப்புகள் வரும்: தமிழிசை நம்பிக்கை

Posted : சனிக்கிழமை,   ஜுன்   01 , 2019  00:25:47 IST

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் சென்னை திரும்பிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது  தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவையில் இடம் இல்லாததற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு பதிலளித்தவர், தமிழகத்திற்கு நிறைய வாய்ப்புகள் வரும். மோடியின் தலைமையில் பதவி ஏற்றுள்ள இந்த அமைச்சரவை இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற எடுத்துச் செல்லும். இன்னும் பல மாநிலங்களில் பல வெற்றிகள் பாஜக குவிக்க உள்ளது. தமிழகம் இன்னும் அதிகம் பலம் பெற இருக்கிறது. அதனால், தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் இருக்கும் என்றார்.

மேலும் மக்களுக்கு துன்பம் தரக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும், அதை இந்த அரசு ஆதரிக்கப் போவது இல்லை.தவறான பிரச்சாரங்கள்தான் பரப்பப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் மீது பாஜகவிகிற்கு அக்கறை இல்லாதது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்கள். ஆனால், பாஜக-விற்கு தமிழகத்தின் மீது அக்கறை இருக்கிறது. தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வருவோம் என்று உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஓபிஸ் மகனுக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர்,  ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது, குறித்து தற்போது நான் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. அது குறித்து அமித்ஷாவும், மோடியும் முடிவெடுப்பார்கள் என்று கூறினார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...