???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   18 , 2019  22:50:39 IST

சென்னையை சேர்ந்த தொழில்நுட்ப பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் லக்மன் முத்தையா. இவர் ஃபேஸ்புகின் போட்டோ மற்றும் வீடியோ பகிரும் செயலியான இன்ஸ்டாகிராமில் உள்ள குறைபாட்டை கண்டறிந்துள்ளார். அதனை சரிசெய்துள்ள ஃபேஸ்புக், அதற்கு பரிசாக 30,000 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 20 லட்சம் பரிசாக வழங்கியுள்ளது. பாஸ்வேர்டை மீண்டும் அமைக்க சொல்லி வரும் கோரிக்கை மூலம் ஒருவரின் இன்ஸ்டிராம் கணக்கை ஹேக் செய்ய முடியும் என்பதே லக்ஷ்மனின் குற்றச்சாட்டு.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அவர் “இந்த பிரச்சனையை நான் ஏற்கனவே ஃபேஸ்புக் பாதுகாப்பு குழுவிடம் அறிக்கையாக கூறினேன். அந்த அறிக்கையில் போதுமான தகவல் இல்லாததால் அவர்களால் அதனை சரிசெய்ய முடியவில்லை. அதன்பிறகு சில இ மெயில் ஆதாரங்கள் மற்றும் இதுதொடர்பான வீடியோ மூலம் அவர்களிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்க முடியும் என்பதை நிரூபித்தேன். ஃபேஸ்புக் குழு தற்போது அதனை சரிசெய்துள்ளது, அதனை கண்டுபிடித்து கூறியதற்கு எனக்கு 30,000 டாலர் பரிசாக வழங்கினர்“ என்று தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...