???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெங்குவில் இருந்து தப்பிக்கத்தான் முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு : ஸ்டாலின் பொளேர்! 0 ஜி.எஸ்.டி. வரி முடிவை தன்னிச்சையாக எடுக்கவில்லை: மோடி 0 அணு ஆயுதப்போர் மூளும் : வடகொரியா எச்சரிக்கை! 0 சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்காதது ஏன்: வித்யாசகர் ராவ் விளக்கம் 0 தீபாவளி பண்டிகை: திரையரங்கங்களுக்கு ஐந்து காட்சி திரையிட அனுமதி! 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான் 0 டெங்குவால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்: மத்திய சுகாதாரத்துறை 0 பாஜகவை வீழ்த்த கம்யூனிச இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்: தா.பாண்டியன் 0 விரைவில் அம்மா திரையரங்குகள்: கடம்பூர் ராஜு அறிவிப்பு 0 தினகரன் தரப்பில் ஆதாரம் எதுவுமில்லை; சின்னம் எங்களுக்கே: கே.பி. முனுசாமி 0 தாஜ்மஹால் துரோகிளால் கட்டப்பட்டது: பாஜக எம்.எல்.ஏ. கருத்து 0 13 மாதங்களும் நெருக்கடியாகத்தான் இருந்தன: வித்யாசாகர்ராவ் 0 இரட்டை இலை சின்னம் யாருக்கு: வழக்கு அக்.23க்கு ஒத்தி வைப்பு! 0 மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த சி.ஆர்.பி.எப் வீரர் கைது! 0 மாநிலங்கள் வளர்ச்சியடைய மாநிலக் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும்: தேவே கெளடா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இணையதளத்தில் புதிய படங்களை வெளியிட்டவர் கைது!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   13 , 2017  00:06:51 IST

சட்ட விரோதமாக திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட திருப்பத்தூர் இளைஞரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.
 
புதுப்படங்கள் மற்றும் உரிய உரிமம் கொடுத்து வாங்காத திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவது தொடர்பாக, நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். 
 
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த கவுரி சங்கர் என்பவரை சென்னையில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் tamilgun.com என்ற இணையதளம் மூலம், திரைப்படங்களை வெளியிட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. 
 
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு, திருட்டு வீடியோ தொழிலில் ஈடுபட்டு வந்த கவுரி சங்கரை கடந்த 6 மாதங்களாக கண்காணித்து வந்ததாகவும், அவரை போலீசிடம் சிக்க வைக்க, திட்டமிட்டு சென்னை திருவல்லிக்கேணிக்கு அழைத்து வந்ததாகவும் அப்போது கவுரி சங்கரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்ததாகவும் கூறப்படுகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...