???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தயாரிப்பாளருக்கு இம்சை அரசனாக மாறிய நகைச்சுவை நடிகர்! 0 சசிகலா குடும்பம்தான் சோதனைக்கு காரணம்: தீபா குற்றச்சாட்டு 0 போயஸ் இல்லத்தில் ரெய்டு நடத்தியது மனவேதனை அளிக்கிறது: மைத்ரேயன் 0 போயஸ் இல்லத்திலிருந்து லேப்டாப், பென் டிரைவ், கடிதங்கள் பறிமுதல்: விவேக் தகவல் 0 ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்: டிடிவி தினகரன் 0 போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை 0 சொகுசுக்கார் இறக்குமதி வழக்கு : நடராஜனுக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்! 0 திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏக்கள்! 0 அறம் படத்தின் கதை என்னுடையதில்லை : கோபி நயினார் 0 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு 0 நாச்சியார் படத்தில் ஜோதிகாவின் வசனம்: மாதர் சங்கம் எதிர்வினை 0 பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்கலாம்: தீர்ப்பு அளித்த நீதிபதி கே.டி.தாமஸ் 0 கருணாநிதியுடன் அதிமுக கூட்டணி கட்சி எல்ஏக்கள் சந்திப்பு 0 நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 0 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அஞ்சலி:மேலாண்மை பொன்னுசாமி - உழைப்பவனின் குரல்

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   31 , 2017  02:12:32 IST


Andhimazhai Image

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.    விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள மேலாண்மறை நாடுதான் பொன்னுசாமியின் சொந்த ஊர். ஊரின் பெயரால் அடைமொழியிட்டுத்தான் இவர் அழைக்கப்படுகிறார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். பாட்டியால் வளர்க்கப்பட்டவர். ஐந்தாம் வகுப்புவரைதான் பள்ளிப்படிப்பு.

 

இவர் எழுதிய முதல் சிறுகதை 1972 ல் செம்மலர் இதழில் வெளியானது. மார்க்சிஸ்ட் கட்சியின்மீது ஈடுபாடு கொண்டவர். பெரும்பாலும் இடதுசாரி இலக்கிய இதழ்களான செம்மலர், சிகரம், விழிப்பு ஆகியவற்றில் ஆரம்பத்தில் எழுதினார். முதலில் இடதுசாரி இதழ்களில் மட்டுமே எழுதிவந்தவர், பின்னாட்களில் வணிக இதழ்களிலும் எழுதத் தொடங்கினார்.  தினமணி கதிர், குங்குமம், கல்கி, ஆனந்தவிகடன், இந்தியா டுடே, சண்டே இன்டியன் ஆகிய இதழ்களில் இவரின் சிறுகதைககள் வெளியாகியுள்ளன.

 

எளிய அன்றாடங்காய்ச்சிகளான கரிசல் காட்டு விவசாய சம்சாரிகளின் வாழ்க்கைப்பாடுகளை எளிய வாக்கியங்களால் கதைகளாக்கியவர் பொன்னுசாமி. அதிர்ச்சி மதிப்பீடுகளோ திருப்பங்களோ அற்ற எளிய எழுத்து நடை அவருடையது. மார்க்சிய சார்பு அவரது கதைகளில் மனிதாபிமானமாக விரிந்து கிடந்தது எனச் சொல்லலாம்.

 

வானதி பதிப்பகம் வெளியிட்ட ‘மின்சார பூவே' என்ற சிறுகதை தொகுப்பிற்கு 2008ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். சாகித்திய அகாடமி விருது, வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் ‘மாட்சிமை’ பரிசு, தமிழக அரசு பரிசு என்று பல பரிசுகள் என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

 

1970-களில் இடதுசாரி இயக்க எழுத்தாளர்களின் சங்கமாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டபோது, அதன் தொடக்கத்துக்குப் பங்களிப்பு செய்தவர்களில் மேலாண்மை பொன்னுச்சாமியும் ஒருவர். பல வருடங்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராக இருந்தவர். எழுத்து மற்றும் இயக்கச் செயல்பாடுகள் ஆகியவை அவரது இரண்டு கண்கள் எனலாம்.

 

நாற்பதாண்டு காலம் இடதுசாரி இயக்கத்திலும், தன் ஒயாத எழுத்துப் பணிகளாலும் எழுதி, உழைத்துக் களைத்துப் போயிருந்த மேலாண்மை பொன்னுசாமியின் இந்த நிரந்தர ஓய்வு எழுத்துலகின் இழப்புதானென்றாலும் அவரது படைப்புகள் கூரிய எளிமைக்காகவும், உழைப்பவனின் சார்பிலான குரல் என்பதாலும் என்றும் நினைவு கூறப்படும்.

 

- சரோ லாமா -click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...