???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெங்குவில் இருந்து தப்பிக்கத்தான் முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு : ஸ்டாலின் பொளேர்! 0 ஜி.எஸ்.டி. வரி முடிவை தன்னிச்சையாக எடுக்கவில்லை: மோடி 0 அணு ஆயுதப்போர் மூளும் : வடகொரியா எச்சரிக்கை! 0 சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்காதது ஏன்: வித்யாசகர் ராவ் விளக்கம் 0 தீபாவளி பண்டிகை: திரையரங்கங்களுக்கு ஐந்து காட்சி திரையிட அனுமதி! 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான் 0 டெங்குவால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்: மத்திய சுகாதாரத்துறை 0 பாஜகவை வீழ்த்த கம்யூனிச இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்: தா.பாண்டியன் 0 விரைவில் அம்மா திரையரங்குகள்: கடம்பூர் ராஜு அறிவிப்பு 0 தினகரன் தரப்பில் ஆதாரம் எதுவுமில்லை; சின்னம் எங்களுக்கே: கே.பி. முனுசாமி 0 தாஜ்மஹால் துரோகிளால் கட்டப்பட்டது: பாஜக எம்.எல்.ஏ. கருத்து 0 13 மாதங்களும் நெருக்கடியாகத்தான் இருந்தன: வித்யாசாகர்ராவ் 0 இரட்டை இலை சின்னம் யாருக்கு: வழக்கு அக்.23க்கு ஒத்தி வைப்பு! 0 மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த சி.ஆர்.பி.எப் வீரர் கைது! 0 மாநிலங்கள் வளர்ச்சியடைய மாநிலக் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும்: தேவே கெளடா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கலாப்ரியாவின் படைப்புலகம்: மதுரையில் அந்திமழை நடத்திய விழா

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   17 , 2017  04:03:33 IST


Andhimazhai Image
அந்திமழை இதழ் சார்பில் கலைஞன் போற்றுதும் என்ற தலைப்பில் கவிஞர் கலாப்ரியாவின் படைப்புலகம் குறித்த ஆய்வரங்கு மதுரையில் 15/7/2017 அன்று ஹோட்டல் பிரேம் நிவாஸ் அரங்கில்  நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் அரங்கம் நிறைந்திருந்தது. நிகழ்வில் கலாப்ரியா  என்னும்  எழுத்தாளுமையின் தாக்கத்தை உணர முடிந்தது.  
 
 
தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் நிகழ்ச்சிக்குத்   தலைமை தாங்கினார். 
 
 
எழுத்தாளர் ஆத்மார்த்தி கலாப்ரியாவின்கவி ஆளுமையின் நுட்பமான தரிசனங்கள் குறித்து உரையாற்றினார். மொழியை அவர் கையாளும் முறை குறித்தும், கலாப்ரியாவின்கட்டுரைத் தொகுப்புகள் குறித்து   தீபா நாகராணி பேசினார். கலாப்ரியா என்னும் தனிப்பட்ட ஆளுமையின் விஸ்தீரணம் குறித்துபெரியசாமி ராஜா  உரையாற்றினார். இலக்கிய விமர்சகர் ந.முருகேசபாண்டியன் கலாப்ரியாவுடனான தனிப்பட்ட நட்பு குறித்தும்,  தன் 19வது வயதில்  கலாப்ரியாவை இல்லம் தேடிச்சென்று சந்தித்தது, கலாப்பிரியா நடத்திய குற்றாலம் கவிதைப் பட்டறை போன்ற நிகழ்வுகளைப்  பற்றி  தன் எண்ணங்களைப்  பகிர்ந்து கொண்டார். முருகேசபாண்டியனின் உரையில் உற்சாகம் கொப்பளித்தது.
 
 
கலாப்ரியாவுடனான தன் நட்பு குறித்தும், அவர் படைப்புகள் மற்றும் கவிதைகள் குறித்த தீர்க்கமான பார்வையையும் முன்வைத்தார்அந்திமழை இளங்கோவன். அவர் ஒரு நாவலை விரைவில் எழுதவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார் இளங்கோவன். கலைஞன் போற்றுதும் என்ற தலைப்பில் அந்திமழை முன்னெடுத்திருக்கும் இந்த நிகழ்வு ஒரு தொடர் நிகழ்வு என்றும் பல     படைப்பாளிகள் தொடர்ந்து கௌரவிக்கப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
 
 
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வழக்கம் போல தன் வசீகரப் பேச்சால் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டார். கலாப்ரியாவின் கவிதையுலகின்  தனித்தன்மைகள்  குறித்தும், கலாப்ரியாவின் கட்டுரை களில் வெளிப்படும் திராவிட இயக்கத்தின் எழுச்சி, சினிமாவை அவர்கள்   பயன்படுத்திக்கொண்ட விதம், எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்ற ஆளுமைகள் மக்களிடையே செலுத்திய பாதிப்புகள், சினிமாஎனும் கலை தமிழர்வாழ்வில் ஊடுருவியுள்ள விதம் என தன் பேச்சில் கலாப்ரியாவின் எழுத்துக்கள்  குறித்தும், தமிழ் வாழ்வின் சமூகக் கூறுகள் குறித்தும் ஓர் அசலானதொரு  உரையைத் தந்தார்.
 
 
ஏற்புரையில் கலாப்ரியா சுருக்கமும் நெகிழ்வுமாகப் பேசினார். படைப்புகள் குறித்த நியாயமான பெருமிதம் கொஞ்சமும் வெளிப்படவில்லை,  ஆனால்  தன் படைப்பு வாழ்வின் பெறுமதி அவர் பேச்சில்  இருந்து வெளிப்பட்டது எனலாம். இந்த ஆண்டிலேயே நாவல் எழுதிவிடுவதாக அந்திமழை இளங்கோவனுக்கு உறுதி அளிக்கவும் அவர் தவறவில்லை!
 
 
விழாவில் கவிஞர் கலாப்ரியா அவர்களுக்கு அந்திமழை சார்பில் சாதனை விருதும்    பணமுடிப்பும் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால்வழங்கப்பட்டது.  விழாவில் கலந்து கொண்ட  பார்வையாளர்களுக்கு அந்திமழை வெளியீடான கலாப்ரியாவின் ”நீ போகின்ற பார்வையெல்லாம் பூமுகம் காணுகின்றேன்” என்ற  கட்டுரைத் தொகுப்பு கலாப்ரியா கையெழுத்துடன்  நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பார்வையாளர்களின் முகவரிக்கு ஆறுமாதம் தொடர்ந்து அந்திமழை இதழ் அன்புப்பரிசாக அனுப்பிவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியை சுவாரஸ்யத்துடனும் சுருக்கமாகவும் தொகுத்து வழங்கினார் மேகா பதிப்பகம் அருணாசலம். பார்வையாளர்கள் வரிசையில்சுரேஷ்குமாரஇந்திரஜித், சமயவேல், திருச்செந்தாழை, அர்ஷியா, அர்விந்த் யுவராஜ், ப.திருமலை உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டார்கள்.
 
 
அந்திமழை நிர்வாக ஆசிரியர் அசோகன் நன்றியுரை வழங்க விழா   இனிதே நிறைந்தது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...