???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி 0 கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தப்பிக்கமுடியாது: வேளாண்துறை அமைச்சர் 0 திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் தமிழக அரசு அறிவிப்பு 0 ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு 0 அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியீடு 0 தன்பாலின திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் இல்லை: மத்திய அரசு 0 செப்டம்பர் 24ம் தேதி நெட் தேர்வு! 0 'மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது'
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடலை கொண்டுவர நடவடிக்கை - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   10 , 2020  03:05:08 IST


Andhimazhai Image

ரஷ்யாவில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ், அவர்களது உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரஷ்யாவின் வோல்காகிராட் மாநிலத்தில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் அங்குள்ள வோல்கா ஆற்றில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்த மாணவர்களுக்கு பா.ம.க. சார்பில் அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்டீபன், கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த விக்னேஷ், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆஷிக், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் ஆகிய நால்வரும் வோல்காகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தனர். வார விடுமுறையில் அங்குள்ள வோல்கா ஆற்றில் குளிக்கச் சென்ற போது ஒரு மாணவர்  நீரில் அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்த ஸ்டீபன், அந்த மாணவரைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். ஆனால், அவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவர்களைக் காப்பாற்ற முயன்ற மேலும் இரு மாணவர்களும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக தெரிகிறது.

 

கடுமையான நெருக்கடிகளுக்கு இடையில் மருத்துவம் படிப்பதற்காக தங்களின் பிள்ளைகளை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்து விட்டு, அவர்கள் மருத்துவர்களாக திரும்பி வருவார்கள் என்று கனவு கண்டு கொண்டிருந்த பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் இந்த செய்தி எந்த அளவுக்கு பேரிடியாக அமைந்திருக்கும் என்பதை உணர முடிகிறது. அவர்களின் துயரத்தை பா.ம.க.வும் பகிர்ந்து கொள்கிறது.

 

ரஷ்யாவில் வோல்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வந்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க மத்திய வெளியுறவு அமைச்சகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...