அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

காவலரின் தாக்குதல்: மூளையில் ரத்தகசிவால் உயிரிழந்த மளிகை கடை வியாபாரி!

Posted : சனிக்கிழமை,   ஜுன்   26 , 2021  10:10:03 IST


Andhimazhai Image

சேலம் மாவட்டம் பாப்பநாயக்கன்பட்டியில் காவல் ஆய்வாளர் பெரியசாமி சரமாரியாக தாக்கியதில் மளிகை கடை வியாபாரி முருகேசன் (வயது-45) உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த நிகழ்வு சாத்தான்குளம் சம்பவத்தை நினைவுப்படுத்துவதாக பலரும் குற்றம்சாட்டினார். இந்நிலையில், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாலேயே முருகேசன் உயிரிழந்திருப்பதாக அவரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

 
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் கடந்த -22ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை கிராமத்திற்கு சென்று மது அருந்தி விட்டு பின்னர் கல்வராயன்மலை வழியாக வீடு திரும்பியுள்ளனர். அப்போது ஏத்தாப்பூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்தவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் குடிபோதையில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இதில் வாக்குவாதம் அதிகரிக்கவே எஸ்.ஐ மற்றும் உடனிருந்த போலீசார் குடிபோதையிலிருந்த முருகேசனை தடியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். முருகேசன் மயங்கி விழுந்த நிலையிலேயே தாக்குதலை நிறுத்தியுள்ளார். எஸ்.ஐ பெரியசாமி.

 

பின்னர், 108 அவசர ஆம்புலன்ஸ் வரவழைத்த தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் உடல் நிலை மோசமடைந்ததால், கடந்த புதன் கிழமை (ஜூன்-23) அதிகாலை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக்  கொண்டு சென்றபோது முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.


இதனைத் தொடர்ந்து ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரங்கராஜ் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு முடிவடைந்து அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 
இந்நிலையில், முருகேசனின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர் இது தொடர்பாக கூறுகையில், “திடமான பொருட்களைக் கொண்டு தாக்கியதால், முருகேசனின் இடது பக்கம் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தவிர மண்டையின் வேறு எந்த பகுதியிலும் காயங்கள் இல்லை. அவருடைய உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளது. முதுகு மற்றும் தொடைப்பகுதிகளில் தடியால் தாக்கியிருக்கக் கூடும். தசைகளின் உள்ளே இரத்த உறைவு ஏற்பட்டிருந்ததால் அந்த பகுதிகள் கருப்பாக இருந்தது என்றார்.

 

இதற்கிடையே, உயிரிழந்த முருகேசனின் குடும்பத்துக்குத் தமிழக அரசு  ரூ.10 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளது. தாக்குதல் நடத்திய காவலர் பெரியசாமி மீது குற்றவியல்  வழக்குப் பதிவு செய்யப்பட்டு பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...