அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஜப்பானிய இதழில் தமிழ் ஹைக்கூ கவிதைகள்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   18 , 2021  11:34:33 IST


Andhimazhai Image

அகிதா இன்டர்நேஷனல் ஹைக்கூ நெட்வொர்க் என்ற இணைய இதழ் உலகம் முழுவதும் எழுதப்படுகின்ற சிறந்த ஹைக்கூ கவிதைகளை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த ராஜகுமாரன் எழுதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.


 
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மருதூர் என்ற கிராமத்தை சேர்ந்த ராஜகுமாரன் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த இருபது வருடங்களாக கவிதை எழுதி வரும் இவரிடம் இது குறித்துப் பேசினோம், “இயற்கை சார்ந்து ஜென் கவிதைகள் எழுதவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். ஹைக்கூ கவிதை எழுதும் பெரும்பாலானவர்கள் விடுகதை போன்று தான் எழுதுகின்றனர். இதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு எழுத வேண்டும் என்று இயற்கை சார்ந்து எழுதத் தொடங்கினேன். இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஜப்பானிய கவிஞர் பாஷோ பெயரில் சர்வதேச அளவில் ஹைக்கூ போட்டி நடைபெற்றது. அதற்கு என் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பினேன். அப்போது இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று ஹைக்கூ கவிதைகளில் என் கவிதையும் ஒன்று.


 
"வழி தொலைந்த காடு
மகிழ்ச்சிதான்
சுற்றிலும் பச்சை"


 
இந்தக் கவிதையை அவர்கள் அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தினார்கள்.


 
அதனைத் தொடர்ந்து 74வது பாஷோ நினைவு ஹைக்கூ போட்டி கடந்த ஆண்டு நடைபெற்றது. அதில் என்னுடைய கவிதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதற்காக சான்றிதழ் ஒன்றும் அனுப்பியிருந்தார்கள். இதற்குப் பின்னர்தான் அகிதா இன்டர்நேஷனல் ஹைக்கூ நெட்வொர்க்கிலிருந்து என்னுடைய கவிதைகளையும் என்னைப் பற்றியும் கேட்டிருந்தனர். அவர்கள் உலகளாவிய ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகளைப் பிரசுரித்து சிறப்பித்து வருகின்றனர். அந்தவகையில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்திருந்த என்னுடைய பத்து கவிதைகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அந்த கவிதைகளை அவர்கள் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து தற்போது வெளியிட்டுள்ளனர்.” என்றார்.


 
அகிதா இன்டர்நேஷனல் ஹைக்கூ நெட்வொர்க் இணைய இதழில் வெளியாகியுள்ள ராஜகுமாரனின் பத்து கவிதைகள் பின்வருமாறு.
 
•           உதிர்ந்த இலை
            நகருகிறது
            தன் நிழலோடு
 
 

•         ஏரி குளம் கடந்து
          தன்னை இழந்தது
          கடலிடம் நதி
 

•         வெள்ளை காகிதம்
          குழந்தையின் கையில்/ நதியும் காடும்
 

•         மீன் விற்ற பிறகும்/
          குறையாமல் இருக்கிறது/ என்னிடம் நதி/
 

•         ஒவ்வொரு நாளும்
          பூவாய் மணம் வீசும்
          புத்தரின் மௌனம்
 

•         புல் வளரும் பாதையின் முடிவில் திறக்கப்படாத கோயில்
 

•         திசையாவும் விரியும்/
          கிளையாவும் தனித்தனியே/
          வானம் பார்க்கிறது/

 

•         இலையுதிர்க்கும் மரம்/
          ஒவ்வொரு நொடியும்/
          புதிது நிழல்/
 

•         ஓட்டம் குறைந்த நதி
          நின்றது ஓரிடத்தில்
          அழகான முகத்தோடு
 
 
•         இலைக்காம்பில்
          பிரபஞ்சம் சுருங்கிய
          ஒற்றைமழைத்துளி

 

இந்தக் கவிதைகள் வெளிவந்துள்ள ஜப்பானிய இதழின் லிங்க் : https://akitahaiku.com/2021/06/14/
 

தா.பிரகாஷ்
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...