???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு! 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழ் பாடவேளைகள் குறைப்பு ரத்து - ராமதாஸ் வரவேற்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   15 , 2020  04:31:41 IST


Andhimazhai Image

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடவேளைகள் குறைக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்த நிலையில், பாடவேளைகள் குறைப்பை சென்னை பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.

 

இதுகுறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பல்கலைக்கழகத்தில் பாடவேளைகள் குறைப்பு ரத்து செய்யப்படுகிறது; ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்று முடிவை மாற்றிக்கொண்ட சென்னை பல்கலைக்கு பாராட்டுகள்!

 

தமிழ் மொழி தாய்க்கு இணையானது. பல்கலைக்கழகங்கள் எத்தனை புதுமைகளை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், தாயை எப்படி ஒதுக்கி வைக்க முடியாதோ, அதேபோல்,  கல்வித்திட்டத்தில் தமிழ் மொழியை ஒதுக்கி வைக்கக் கூடாது; ஒதுக்கிவைக்க முடியாது என்பதை பல்கலைகள் உணர வேண்டும்.

 

கல்லூரி மாணவர்களின் ஆங்கிலத் திறனை அதிகரிக்கும் பல்கலைக்கழகங்களின் முயற்சி வரவேற்கத்தக்கது தான். அதற்கான கூடுதல் பாடவேளைகளை உருவாக்கி ஆங்கிலத் திறன் வகுப்புகளை பல்கலைக்கழகங்களும்  கல்லூரிகளும் நடத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...