???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-9 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   10 , 2018  09:56:49 IST

 

இதில் என்ன கொடுமையென்றால், இதற்கான அறிவியலை கூறுங்கள். இது எப்படி செயல்படுகிறது, என்ன காரணமென்று கேட்டே உங்களை அறிவியல் உலகம் துரத்தி விட்டு, பின்னாடியே எல்லா பொருட்களையும் ஆராய்ந்து, ஒரு மருந்தை கண்டுபிடித்து, அதை நம்மிடமே மறுபடியும் விற்று விடுவதே உலக பொருளாதார கொள்கை. இதையும் அரசாங்கம் ஒப்புக் கொண்டு, என்ன ஒரு கண்டுபிடிப்பு என்று நம்மை தவிர, எல்லோரையும் புகழும். சித்தர்கள் ஒவ்வொரு உறுப்புக்கும் என்னென்ன தேவை, எப்படி கொடுக்க வேண்டுமென்று  விலாவாரியாக விளக்கி தான் கூறியுள்ளார்கள். இதை நீங்கள் மருந்தாகவே எண்ண வேண்டாம், உணவாகவே எண்ணுங்கள்.

 

உணவே மருந்து என்ற வார்த்தை தமிழனுக்கும், தமிழுக்கும் உள்ள உடைமை. ஆனால் இன்று மருந்தே விஷமாகிவிடும் காலத்தில் தான் நாம் வாழ்கிறோம். இதை எவரும், எந்த மருத்துவரும் மறுப்பதற்கில்லை. கண்டுபிடித்த நல்லவற்றை எல்லாவற்றையும் உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஏற்றுக் கொள்ள விடவும் மாட்டார்கள் போலிகள். நம் துரதிஷ்டமான நிலைமை, போலிகள் நம் பக்கமும் உள்ளனர். எதிர்பக்கமும் உள்ளனர். எதிரி ஒரு பக்கம் இருந்தால் பரவாயில்லை, எதிர் காலம் நம்மூடே ஊடியிருக்கும் எதிரியையும் சேர்த்து அழிப்பதென்பதே இன்று வரை நாம் மீள முடியா நிலைமை. தாய்ப்பாலே கலப்படமான பூமி இது. தாய்பாலை கொடுக்க அஞ்சும் உலகம் இது. சிலருக்கு கொடுக்க மனமிருந்தும், சுரப்பதும் குறைவு. இன்று நிறைய இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. காரணம் கரு உருவாக கொடுக்கப்படும் மருந்துகளின் விளைவுகள் தான். எனக்கு தெரிந்து இன்று பலபேருக்கு இரட்டை குழந்தைகள். ஒன்று போதுமென்பவனுக்கு இரட்டை குழந்தையும், இரண்டு போதுமென்பவனுக்கு 3ம் உள்ள நிலைமை. எங்கேயும் காணலாம். நிலைமை இப்படியே போனால் நூறு, இரு நூறு வருடங்களுக்கு பிறகு என்னவாகுமென்பது நினைத்து பாருங்கள். எப்படியோ இன்று நாம் வாழ்ந்து விட்டு போய்விடுவோம்.

 

நம் சந்ததியினரை நினைத்துப் பாருங்கள்.  இயற்கை தன்னை சரிசெய்து கொள்ளும் என்று நம்முன்னோர்கள், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த நம் முன்னோர்கள் எல்லா விதத்திலும் அறிவாளிகளே. இதில் சுகப்பிரசவம் என்பதே வாய்ப்பில்லை என்ற நிலை. உழைப்பில்லை, முறையான உடற்பயிற்சியில்லை, உணவு பழக்கவழக்கமில்லை மக்கள் தொகை பெருக்கம், சுகாதராமற்ற குடிநீர், மாசுபட்டகாற்று என எல்லாம் இணைந்து புற்றுநோயாகவும் உருவெடுத்துள்ளது. தினமும் நம் உணவில் ஒரு வேளையாவது  நான் மேலே கூறிய மூலிகைகளை எடுத்து வந்தால் ஆயுளை தள்ளிப்போடலாம். இவ்வளவு நாள் நான் அனுபவத்தில் அறிந்தது. உடனடி சிகிச்சைக்கு அல்லேபதி மருந்தும், உணவே மருந்தென்னும் தமிழ் சித்த வைத்தியமுறையையும், இரு தண்டவாளம் போன்றது தான். இது இரண்டும் இணைந்து செயல்பட்டால் நமக்கு வெற்றியே.

 

ஆனால், இன்றைய மருத்துவ படிப்பு, ஒவ்வொன்றையும் தனிதனியாக பிரித்து வைத்து, நமக்கு கல்வியை புகுத்துவதே வேதனை. சித்த வைத்திய கூறுகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, ஒன்றிணைந்த மருத்துவ கல்வியாக நாம் பயிலும் போது, உலகில் தற்சார்பு வைத்தியத்தில் நாம் தான் முன்னோடியாகவும் இருப்போம். நம்முடைய தற்சார்பு பொருளாதாரமும் வளரும். இது மருத்துவத்திற்கு மட்டுமல்ல, எல்லா துறைகளையும் சாரும். நம் பொருளாதாரத்தையும் உயர்த்தும். சுருக்கமாக சொல்லப்போனால் அறுவை சிகிச்சையும் வேண்டும். ஆயா சிகிச்சையும் வேண்டும்.

 

ஒரு கால கட்டத்தில் ரிபைண்ட் எண்ணெய் பயன்படுத்த கூறியவர்களே இன்று செக்கு எண்ணெய்யை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். பழைய கலாச்சாரம் திரும்புகிறது. நம் நகர வாழ்க்கை, நாகரீக எண்ணங்கள்  எல்லாம் அழகு தான். மேற்கத்திய பாணியில் எனக்கும் அழகாகதான் தெரிகிறது. உல்லாசம், அதீத காமம், மீறிய போதை அதனுடன் ஆடல் பாடல்கள் என இவற்றிற்கெல்லம் வேண்டிய பணம் என எல்லாவற்றையும் ஒரு சேர அனுபவிக்க நாம் என்ன கவிஞன் குண்டலத்தோடு பிறந்த கண்ணதாசனா? நூற்றாண்டுக்கு ஒரு முறை பூத்த பூ அது. அனுபவிக்கத்தான் பிறந்திருக்கிறோம், அறிவோடு அளவோடு அனுபவியுங்கள் என்பதே தமிழ் கூற்று.

 

மிக நீண்ட வரிகளுக்கு பின்னர் இருவேறு நிலைகளின் கண்ணதாசனின் பார்வை, இறைவனின் பார்வையன்றி ஏதாவது இருக்குமா? கூறுகிறேன்.

               

                வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை

                வான் மதியும். மீனும், கடல் காற்றும், மலரும் மண்ணும், கொடியும்

                சோலையும்  நதியும் மாறவில்லை.... மனிதன் மாறிவிட்டான்.

                நிலைமாறினால் குணம் மாறுவான்

                பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்.

                தினம் சாதியும் பேதமும் கூறுவான்

                அதன் வேதன் விதியென்று ஓதுவான்

 

-  கண்ணதாசன். (பாவமன்னிப்பு)

 

இன்றைய அரசியல் சூழலோடு ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

 

                பறவையை கண்டான் விமானம் படைத்தான்

                பாயும் மீன்களில் படகினை கண்டான்

                எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்

                எதனை கண்டான் பணம் தன்னை படைத்தான்

                மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான்.

 

அறிவியல் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எல்லாம், பணத்திற்கே ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். இது ஒரு வகையான மனித நிலை. இனி வேறு வகை நிலையான கண்ணதாசனின் பார்வையை பார்ப்போம்.

 

                ஆண்டவன் படைச்சான், என்கிட்ட கொடுத்தான்

                அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான் - என்னை அனுபவி ராஜான்னு

                அனுப்பி வைச்சான்.

                உலகம் எந்தன் கைகளிலே, உருளும் பணமும் கைகளிலே,

                யோசிச்சு பார்த்தால் நானே ராஜா - வாலிபம் பருவம் கிடைப்பது லேசா

                உல்லாசம் சல்லாபம் எல்லாமும் இங்கேடா.

                நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன் - ஆகா

                நடப்பத்தை எண்ணி வருத்தப்பட்டால் அவன் மூடன்

               போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்

               அவன் இவனே, இவன் அவனே

               அட இன்றும் இல்லை, நாளை இல்லை

               இரவில்லை, பகலில்லை, இளமையும் முதுமையும் முடிவுமில்லை.

 

-  நிச்சயதாம்பூலம் படத்திற்காக

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...