அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது!

Posted : புதன்கிழமை,   ஜுன்   29 , 2022  08:30:52 IST

ராஜஸ்தானில் நுபுர் சர்மா ஆதரித்து கருத்து தெரிவித்திருந்த தையல்காரர் படுகொலையில் தொடர்புடைய இருவரை அம்மாநில காவல் துறை கைது செய்துள்ளது.

 
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டம் தன்மண்டி பகுதியில் தையல் கடை நடத்தை வருபவர் கண்ணையா லால். இவர் சமூகவலைதள பக்கத்தில் பாஜக நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

 
இதனிடையே, நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாக கண்ணையா போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

 
இந்நிலையில், கண்ணையாவின் தையல் கடைக்கு நேற்று மாலை ரியாஸ் அக்தரி மற்றும் ஹவூஸ் முகமது ஆகிய 2 பேர் வாடிக்கையாளர்கள் போல் வந்துள்ளனர்.

 
தனக்கு புதிதாக சட்டை தைக்க வேண்டும் என அக்தரி கண்ணையாவிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அக்தரியின் சட்டைக்கு அளவெடுக்கும் வேலையை கண்ணையா பார்த்துவந்தார். அப்போது, அக்தரி தான் மறைத்து வைத்திருந்த கூர்மையாக கத்தியால் தையல் கடைக்காரர் கண்ணையாவை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில், கண்ணையா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அக்தரி கண்ணையாவை தாக்குவதை அவருடன் வந்த ரியாஸ் வீடியோ எடுத்துள்ளார். இந்த கொடூர தாக்குதலில் கண்ணையாவின் தலை துண்டிக்கப்பட்டது.

 
கண்ணையாவை தலைதுண்டித்து கொலை செய்த 2 பேரும் கடையில் இருந்து தப்பிச்சென்றனர். பின்னர் கண்ணையாவை கொலை செய்த வீடியோவை சமூகவலைதள பக்கமான பேஸ்புக்கில் அக்தரியும், முகமதுவும் பகிர்ந்துள்ளனர். பின்னர் குற்றவாளிகள் இருவரும் பேஸ்புக்கில் பதிவிட்ட மற்றொரு வீடியோவில் கொலை செய்யப் பயன்படுத்திய கத்தியை காட்டி பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது.

 
இந்த சம்பவத்தை தொடர்ந்து ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது. இதனையடுத்து, உதய்ப்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 
கண்ணையாவை தலை துண்டித்து கொலை செய்த குற்றவாளிகள் அக்தரி மற்றும் ரியாசை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அக்தரி உள்ளூரில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வேலை செய்து வருவதாகவும் ரியாஸ் மளிகைகடை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...