???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காக்கிச்சட்டையின் விலை ஐம்பதுஇலட்சம்!

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   03 , 2014  02:46:25 IST

 
    தனுஷ் தயாரித்து துரைசெந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு முதலில் டாணா என்று பெயரிட்டிருந்தார்கள். அந்தப்பெயர் காவல்துறையினரைக் கிண்டல் செய்கிற மாதிரி இருக்கிறது என்று யாராவது கிளம்பிவிட்டால் சிக்கலாகிவிடும் என்பதை உணர்ந்து படத்தின் பெயரை மாற்ற முடிவுசெய்தனர். பல பெயர்களை யோசித்துக் கடைசியில் காக்கிச்சட்டை என்ற பெயரைத் தேர்வு செய்துவிட்டனர். ஆனால் அந்தப் பெயர் சத்யாமூவிஸிடம் இருக்கிறது. எனவே அவர்களிடம் அந்தப்பெயரைக் கேட்டிருக்கிறார்கள். தொடக்கத்தில் மறுத்தவர்கள் பின்பு அதற்கு ஒரு விலை சொல்லி அதைக்கொடுத்தால் பெயரைக் கொடுக்கிறோம் என்று சத்யாமூவிஸில் கேட்டிருக்கிறார்கள். அதற்கு தனுஷ்¨ம் ஒப்புக்கொண்டிருக்கிறார். அவர்கள் சொன்னவிலை எவ்வளவு தெரியுமா? தலைப்பைக் கொடுக்க ஒண்ணேகால்கோடி கேட்டார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்து அந்தப்பயெரே வேண்டாம் என்று நினைத்திருக்கிறார்கள். வேறு என்ன பெயர் வைக்கலாம் என்று பலநாட்கள் யோசித்துப் பல பெயர்களை எழுதிப்பார்த்திருககிறார்கள். ஆனால் அவை எதுவும் படக்குருவினருக்குத் திருப்தி தரவில்லையாம். எனவே தொகையைக் குறைத்துத் தரச்சொல்லி மறுபடியும் அந்தப்பெயரைக் கேட்போம் என்று முயன்று பார்த்திருக்கிறார்கள். அவர்கள் ஒன்று கேட்க இவர்கள் ஒன்று சொல்ல என்று பேரம் நடந்து கடைசியாக ஐம்பதுஇலட்சம் ரூபாய் கொடுத்து அந்தப்பெயரை வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. படம் வெளியாகி இவ்வளவு ஆண்டுகள் கழித்து அந்தப்படம் இவ்வளவு பணத்தைச் சம்பாதித்துத் தந்திருக்கிறதேயென்று சத்யாமூவிஸினர் சந்தோசத்தில் இருக்கிறார்களாம். இந்தப்பணத்தில் ஒரு சின்னபட்ஜெட் படமே எடுத்துவிடலாம் பெயருக்காக இவ்வளவு பணம் தரவேண்டியிருக்கிறதே என்று தனுஷ் தரப்பினர் வருத்தத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...