???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்திற்கு பாஜக-அதிமுக கூட்டணி செய்தது என்ன?- அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கேள்வி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   22 , 2020  11:36:22 IST

தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக அரசு சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். இந்த விழாவின் போது பேசிய அவர், ஊழல் குறித்து பேசுவதற்கு காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும் 10 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக, தமிழகத்திற்கு என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பிய அமித்ஷா, குடும்ப அரசியலுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார். இந்த விழாவில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். 
 
இந்நிலையில் அமித்ஷாவின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் திமுக இருந்த காலத்தில் தான் என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது திமுக தான் என்று கூறியுள்ள டி.ஆர்.பாலு, காவிரி நடுவர் மன்றம், விவசாயிகளின் 72 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது ஆகியவை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக அங்கம் வகித்த காலத்தில் தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மத்திய பாஜக அரசு-அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டிற்குச் செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர் ஹைட்ரோ கார்பன் திட்டம், இந்தித் திணிப்பு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட துரோகங்களையே செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஜி.எஸ்.டி. மூலம் இதுவரை தமிழகத்தில் இருந்து கிடைத்த நிதி எவ்வளவு? என்றும், அதில் தமிழ்நாட்டிற்கு செலவிட்டது எத்தனை கோடி? என்றும் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்..


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...