???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   21 , 2019  21:31:16 IST

மருத்துவப் படிப்பு சேர்க்கையில் மத்தியத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது குறித்து மக்களவையில் பேசிய தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பாலு, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 15-ன் உட்பிரிவு 5-ன்படி, கல்வி இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவீதம் இடஒதுக்கீடு பொதுத் தொகுப்பில் இருந்து ஏன் வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். சமீபத்தில் அமலான பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு மட்டும் தவறாமல் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

மாநில மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மொத்த இடங்களில் பொதுப்பிரிவுக்கு 15% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அறிவுறுத்தியது. 2017-18-ல் பொதுப்பிரிவில் 9,966 இடங்கள் மத்திய அரசுக்குக் கிடைத்தது. அதில், 2,689 இடங்கள் 27% ஓபிசி-க்கு ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும்.

ஆனால் ஓபிசி-க்கான 2,689 இடங்களில் 260 இடங்கள் மட்டுமே மத்திய நிறுவனங்களில் ஒதுக்கப்பட்டன. ஆனால் மாநில கல்வி நிறுவனங்களுக்குத் தரப்படவில்லை.

2018-19 கல்வியாண்டிலும் பொதுத் தொகுப்பில் இருந்து மாநில மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை மத்திய அரசு ஒதுக்கவில்லை என டி.ஆர். பாலு கூறினார்.  தமிழகத்தில் மாநில சட்டப்படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது போல், மருத்துவப் படிப்பில் 50 சதவிகித இடங்களை ஒதுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தங்களுடைய கோரிக்கை அரசியலமைப்புச் சட்ட வரன்முறைக்குட்பட்டது எனக் கூறிய பாலு மத்திய அரசு அதற்கு எதிராக செயல்படக்கூடாது என்றும் வலியுறுத்தினார். அடுத்த கல்வியாண்டிலாவது பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீடு மத்திய தொகுப்பில் இருந்து வழங்கவேண்டும் என டி.ஆர். பாலு கேட்டுக்கொண்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...