???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் 0 காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் 0 காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்! 0 காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி ராஜினாமா 0 காஷ்மீரில் மெகபூபா அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பா.ஜ.க 0 மன்சூர் அலிகான் கைது: இயக்குநர் பாரதிராஜா கண்டனம் 0 மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர் பரிந்துரை: குமாரசாமி அறிவிப்பு 0 புலன் மயக்கம் - 89 - ஆனந்தம் எனும் யாழ் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 ஆன் லைனில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7-ல் தொடக்கம்! 0 டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் 0 பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பே இல்லை: அருண் ஜெட்லி திட்டவட்டம் 0 மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கூடாது என்பது எனது தனிப்பட்ட விருப்பம்: தலைமை நீதிபதி 0 மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு: கர்நாடக முதலமைச்சர் எதிர்ப்பு 0 காவல்துறை மூலம் அச்ச உணர்வு பரப்புவதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின் 0 டெல்லி அரசியல் குழப்பத்தால் மக்கள் பாதிப்பு: ராகுல் குற்றச்சாட்டு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கவுத்திமலையில் கிடைக்கும் கனிம வளத்துக்காக பசுமை சாலை அமைக்கவில்லை: தி.மலை ஆட்சியர்

Posted : புதன்கிழமை,   ஜுன்   13 , 2018  00:54:27 IST

பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டம் கவுத்தி மலை பகுதியில் கிடைக்கும் கனிம வளங்களை எடுத்து செல்வதற்காக என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி கூறியுள்ளார்.
 
ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 
 
சென்னையில் இருந்து சேலத்திற்கு பசுமை வழிச்சாலை அமைய உள்ளது. தொழில் நகரங்களான சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் சுற்றுலா தலங்களான திருவண்ணாமலை, ஊட்டி, ஏற்காடு ஆகியவற்றை இந்த சாலை மார்க்கமாக இணைக்க பெரிதும் உதவுகிறது.
 
மேலும் விவசாய விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பிற நகரங்களுக்கு துரிதமாக கொண்டு செல்ல இந்த சாலை மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த சாலையின் வடிவமைப்பில் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதி கூடுமான வரை தவிர்க்கப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் தோராயமாக 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 18 ஹெக்டேர் பரப்பு வன நிலத்தில் மட்டுமே சாலை அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு குறைந்த அளவிலான மரங்களே அகற்றப்படுவதுடன், இந்த சாலை சுமார் 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் சுமார் 3 லட்சம் மரங்கள் நடவு செய்து பராமரிக்கப்பட உள்ளது.
 
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுத்தி மலை பகுதிக்கும், பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ள இடத்திற்கும் இடையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கவுத்திமலை கனிமம் குறித்த மனுவும் ஏற்கனவே தள்ளுபடி செய்து முடிக்கப்பட்டு விட்டது.
 
 
எனவே, இந்த சாலை அமைக்கும் திட்டம் கவுத்தி மலை பகுதியில் கிடைக்கும் கனிம வளங்களை எடுத்து செல்வதற்காக என்ற கருத்து முற்றிலும் தவறானது. இந்த திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் கையகப்படுத்தப்பட உள்ள மொத்தம் 860 ஹெக்டேர் நிலத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள் 155 ஹெக்டேர், தனியார் நிலங்களில் நன்செய் நிலங்கள் 100 ஹெக்டேர், புன்செய் நிலங்கள் 605 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட உள்ளது.
 
இந்த திட்டம் பொதுமக்களின் குறிப்பாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை பெரிதும் மேம்படுத்தக் கூடியதாகும். இந்த திட்டம் பொதுமக்களின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு நிறைவேற்றப்படும் சீரிய திட்டமாகும்.
 
இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும், விவசாயிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை எந்த நேரத்திலும் சந்தித்து, தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். 3-ம் நபர்களால் பரப்பப்படும் வீண் வதந்திகளை எக்காரணம் கொண்டும் நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களான வாட்ஸ் அப் மற்றும் முகநூல் மூலம் வரும் தகவல்கள் உண்மையல்ல."
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...