சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை முதல் முறையாக சுவிட்சர்லாந்து நாட்டு அரசு இந்திய அரசிடம் வழங்கி உள்ளது.
சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இந்தியா உள்ளிட்ட 75 நாடுகளுடன் 31,00,000 வங்கி கணக்குகள் குறித்த விபரங்களை பகிர்ந்துள்ளதாக சுவிட்சர்லாந்து வரி நிர்வாகத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்த கணக்குகள் குறித்த தகவல்களை வழங்கி உள்ளதாகவும், இதே போன்ற அடுத்த பட்டியல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பட்டியலில் பெரும் தொழிலதிபர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பெயர்களே அதிக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.