???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்! 0 விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு 0 தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு 0 சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் 0 தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்! 0 காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு! 0 சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி 0 ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை! 0 அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி! 0 கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

`கோகுல்ராஜ் யாரென்றே தெரியாது’: பிறழ்சாட்சியாக மாறிய ஸ்வாதி!

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   11 , 2018  23:50:54 IST

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற பொறியியல் பட்டதாரி 2015-ம் ஆண்டு, பள்ளிப்பாளையம் அருகே தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை அடுத்து, சேலம் தீரன் சின்னமலை பேரவையைச் சேர்ந்த யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், இறப்பதற்கு முன், கடைசியாக கோகுல்ராஜ், ஸ்வாதி என்ற கல்லூரித் தோழியுடன், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலைஅடிவாரத்தில் அமர்ந்து பேசிய சிசிடிவி காட்சி கிடைக்கப்பெற்றது.
 
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான ஸ்வாதி, தனக்கு கோகுல்ராஜ் யாரென்றே தெரியாது எனவும், சிசிடிவியில் குறிப்பிடப்பட்ட இடத்தில் இருக்கும் பெண் தான் இல்லை எனவும் கூறி பிறழ்சாட்சியாக மாறினார். சாட்சி மாறியதன் காரணம் குறித்து கேட்ட நீதிபதி இளவழகனிடம், போலீசார் இதற்கு முன்பு தன்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கியதாகவும் ஸ்வாதி விளக்கமளித்தார்.
 
கொங்கு மண்டலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கொலையில், முக்கிய சாட்சியான ஸ்வாதி பிறழ்சாட்சியாக மாறியது, வழக்கில் கோகுல்ராஜ் தரப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணை 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...