???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு!

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   17 , 2020  21:19:47 IST

கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சிஏஏ, என்ஆர்சி-க்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சுவாமி அக்னிவேஷ் தன் தலைப்பாகையை முஸ்லிம் லீக் பிரமுகரின் தொப்பியுடன் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

‘அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்’ எனும் பேரணி கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்டு சிஏஏ, என்ஆர்சி-க்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவற்றைத் திரும்பப் பெறுமாறு கோரிக்கை வைத்தனர். ஆரிய சமாஜ அறிஞரும் ஹரியானா மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சுவாமி அக்னிவேஷ் அதில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

சிஏஏ போராட்டங்களுக்கு எதிராக சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த பிரதமர் மோடி, ”வன்முறையைப் பரப்புவோரை அவர்கள் அணிந்துள்ள உடைகளைக் கொண்டு அடையாளம் காணலாம்” எனக் கூறியிருந்தார். அதற்கு எதிர்வினை எனச் சொல்லி, சுவாமி அக்னிவேஷ் தன் காவிநிறத் தலைப்பாகையை முஸ்லிம் லீக் பிரமுகரின் தொப்பியுடன் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து பேசிய அவர், “தொப்பி அணிவது என்னை முஸ்லிமாக ஆக்கிவிடாது; அதேபோல, அவரை ஓர் இந்துவாகவும் மாற்றாது. மோடியே நீங்கள் முயற்சி செய்து இதில் யார் என்னவெனக் காட்டுங்கள்” என்றார். மேலும், சிஏஏ-வை ஒன்றிணைந்து எதிர்த்ததற்காகவும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்காகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அத்தோடு, கேரளாவின் இந்நிலைப்பாடு நாட்டுக்கே ஓர் உதாரணம் என்றும் குறிப்பிட்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...