???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் பதவி பறிப்பு 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8,78,254 ஆக அதிகரிப்பு 0 தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது 0 இந்தியா உண்மையாகவே நல்ல நிலையில் உள்ளதா? ராகுல் காந்தி கேள்வி 0 பள்ளி மாணவா்களுக்கு காணொலி பாடங்களை பதிவேற்றித் தர உத்தரவு 0 அரசு பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 31 வரை தடை தொடரும் 0 இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம் 0 மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு 0 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மண்டலத்தில் 96.17% பேர் தேர்ச்சி 0 நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கு கொரோனா பாதிப்பு 0 தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு 0 தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு 0 கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   14 , 2019  22:50:42 IST

தன் ஆரம்பகால வாழ்க்கையை ரேடியோ மிர்ச்சி எஃப்எம்மில் தொடங்கியவர் பாடகி சுசித்ரா. தனது வசீகர குரலால் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவர், தொடர்ந்து லேசா லேசா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக தன் பயணத்தை தொடங்கினார்.

பின்னணி பாடகியாக திரையுலகில் சிறப்பாக வலம் வந்த அவர், பல்வேறு படங்களில் நடித்த நடிகர் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். 2017ம் ஆண்டு மார்ச் மாதம், சுசி லீக்ஸ் என்ற பெயரில் பல்வேறு கோலிவுட் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை, தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார் சுசித்ரா. இது தொடர்பாக அவரது கணவர் கார்த்திக், இது ஹேக்கர்களின் வேலை என குறிப்பிட்டு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சிறிது காலத்தில் நடிகர் கார்த்திக் விவகாரத்து பெற்றதால், சுசித்ரா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இதற்கிடையே மன குழப்பத்தில் தவித்து வந்த சுசித்ரா, காணவில்லை என கடந்த 11ம் தேதி சுசித்ராவின் சகோதரி சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சென்னை நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த சுசித்ராவை மீட்டனர்.

அப்போது, தம்மை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடத்துவதால், தனது குடும்பத்தை விட்டு விலகி வந்ததாக போலீசாரிடம் சுசித்ரா தெரிவித்துள்ளார். சுசித்ராவை மீட்ட காவல்துறையினர், சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...