அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்! 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு! 0 பாலியல் தொழிலாளர்களை மாண்புடன் நடத்த வேண்டும்: காவல்துறை, ஊடகங்களுக்கு நீதிபதிகள் வழிகாட்டுதல் 0 பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் நடந்துகொண்டது தமிழகத்தின் கரும்புள்ளி: அண்ணாமலை காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

'சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் ஷூட்டிங் தொடங்கியது; பாலிவுட்டில் சூர்யா!

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   25 , 2022  21:31:14 IST

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் மெகா ஹிட்டான சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இதனை பிரபல தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ராவுடன் இணைந்து சூர்யாவின்2டி நிறுவனம் தயாரிக்கிறது.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தில் அக்சய் குமார், நடிகை ராதிகா மதன் ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடிக்கின்றனர். 2020-ல் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் மெகா ஹிட்டானது. தியேட்டர் எக்ஸ்பீரின்ஸ் படமான சூரரைப் போற்று, கொரோனா பரவலால் துரதிருஷ்டவசமாக அமேசான் ஓடிடியில் வெளியானது. இருப்பினும் ரசிகர்கள் இந்த படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பை அளித்தனர்.
 
ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா சிறப்பாக உருவாக்கியிருப்பார். இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனான படங்களில் ஒன்றாக கருதப்படும் சூரரைப் போற்று, தற்போது இந்தியில் உருவாகி வருகிறது. படத்தின் பூஜை மற்றும் ஷூட்டிங் காட்சியை ஹீரோ அக்சய் குமார் ட்விட்டரில் வெளியிட்டார்.
 
முன்னதாக பூஜையில் பங்கேற்பதற்காக சூர்யா நேற்று மும்பை சென்றார். இதுதொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகின. சூரரைப் போற்று இந்தி ரீமேக் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சூர்யா, உங்களின் அன்பும் ஆசிர்வாதமும் எப்போதும் தேவை என்று கூறியுள்ளார். இந்தியில் சூரரைப் போற்று படத்தை தயாரிப்பதன் மூலம் பாலிவுட்டில் சூர்யா தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். தற்போது சூர்யா வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.
 
சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை தொடர்ந்து, கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பேனரில் ஒரு படத்தை இயக்க சுதா கொங்கரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் தயாராகவுள்ளது. இதில் சூர்யா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கும் படம் ஒன்றிலும் சூர்யா நடிக்கவுள்ளதால் சுதா படத்தின் ஹீரோ சூர்யாதானா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இவை ஒருபக்கம் இருந்தாலும் பாலிவுட் பட தயாரிப்பாளர் என அடுத்த லெவலுக்கு தற்போது பாய்ந்துள்ளார் சூர்யா.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...