???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நடக்கிற பாதையில் முள் போடாதீர்கள்-சூர்யா உருக்கம்

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   18 , 2014  02:50:48 IST

 
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானது சூர்யாவின் அஞ்சான். முதல்மூன்று நாட்கள் படம் திரையிட்டப்பட்டிருந்த திரையரங்குகளில் எல்லாம் திருவிழாக்கோலத்தைக் காணமுடிந்தது. தமிழகத்தில் 450, ஆந்திராவில் 600 கேரளாவில் 170 திரையரங்குகளில் இந்தப்படம் திரையிடப்பட்டிருக்கிறது.
வெளிநாடுகள் எல்லாம் சேர்த்தால் சுமார் 1500 திரையரங்குகள் என்று படக்குழுவினர் சொல்கிறார்கள். இது முந்தைய சூர்யா படங்களைக் காட்டிலும் மிகவும் அதிகம் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் படத்தைப்பற்றி அந்தப்படம் வெளியாகும் முன்பே கடுமையான எதிர்க்கருத்துகளும் வரத்தொடங்கிவிட்டன. படம் பார்த்துவிட்டுக் குற்றம் சொன்னால் தப்பில்லை. ஆனால் படம் பார்ப்பதற்கு முன்பே அதைப்பற்றித் தவறாகப் பேசுவது எதனால் என்று புரியவில்லை என்று புலம்புகிறார் இயக்குநர் லிங்குசாமி. படத்தின் பத்திரிகையாளர் காட்சியின் போதுதான் இந்தப்புலம்பல். உடன் வந்திருந்த சூர்யா பேசும்போது, நான் இந்த உயரத்துக்கு வந்தததற்குக் காரணமே பத்திரிகைகள்தாம். உங்களுடைய விமர்சனங்களைப் பார்த்துத்தான் நான் என்னைச் சரி செய்துகொள்வேன். நான் விமர்சனங்கள் செய்வதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இப்போது என் படம் மட்டும் இன்றி எல்லாப் பெரிய படங்களுமே வெளியாகும் முன்பே அப்படத்துக்குப் பல எதிர்க்கருத்துகளைச் சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள். இந்தப்போக்கு நல்லதல்ல. விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். அதேசமயம் நான் நடக்கிற பாதையில் முட்களைப் போடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று உருக்கமாகப் பேசினார். அஞ்சான் படம் குறித்து சமுகவலைத்தளங்களில் அளவுக்கதிகமான கேலிகளும் கிண்டல்களும் உலாவந்துகொண்டிருப்பதைக் கருத்தில்கொண்டு சூர்யா இதைப்பேசினார் என்று தெரிகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...