அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நடிகர் சூர்யா பழங்குடி இருளர் நலனுக்கு ரூ. 1 கோடி நிதியுதவி!

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   01 , 2021  15:38:48 IST

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பழங்குடியினர் இருளர் நலனுக்காக ரூ.1 கோடியை நடிகர் சூர்யா வழங்கினார்.
 
சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ள படம் ஜெய் பீம்.  ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம் நாளை (நவம்பர் 2 ஆம்) வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஷ், ரஜிஷா விஜயன், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஜெயப் பிரகாஷ்  உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்தப் படம் முன்னாள் நீதிபதி சந்துரு என்பவரின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் குறித்து இந்தப் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக பழங்குடி இருளர் நலனுக்காக ரூ.1 கோடி வழங்கப்பட்டது.  அதனை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...