![]() |
ஆஸ்கர் போட்டிக்கான தகுதிப் பட்டியலில் சூரரைப்போற்றுPosted : சனிக்கிழமை, பிப்ரவரி 27 , 2021 08:03:21 IST
ஆஸ்கருக்கான தகுதி பட்டியலில் மொத்தமுள்ள 366 படங்களில் சூரரைப்போற்று படமும் இடம்பெற்றுள்ளது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று ஓடிடியில் நேரடியாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதனைத்தொடர்ந்து ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலுக்கும் படம் தேர்வானது. இந்நிலையில், சூரரைபோற்று திரைப்படம் ஆஸ்கார் குழு தேர்வு செய்துள்ள ஆஸ்கருக்கு தகுதி வாய்ந்த சிறந்த படங்களின் பட்டியலில் நுழைந்துள்ளது. இந்தப் பட்டியலில் மொத்தம் 366 படங்கள் தேர்வாகியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே படமாக சூரரைப் போற்று திரைப்படம் அமைந்துள்ளது.
|
|