???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சூரப்பா மீதான புகார்களை விசாரிக்கும் ஆணையத்தில் 13 அலுவலர்கள் நியமனம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   22 , 2020  11:16:28 IST

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு எதிரான விசாரணையில் நீதியரசர் கலையரசனுக்கு உதவுவதற்காக 13 அலுவலர்களை நியமித்து  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்காக விசாரணை அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் உதவுவதற்காக 13 பேர் கொண்ட அலுவலர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.
 
இந்தக் குழுவில் காவல்துறை அதிகாரி, ஆடிட்டர்  வழக்கறிஞர்கள், தட்டச்சர், அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை மேற்கொள்ள உள்ள அலுவலகம் சென்னை பசுமை வழி சாலை யில் அமைக்கப்பட இருக்கிறது.
 
அதனைத் தொடர்ந்து சூரப்பா மீது ஆதாரங்களுடன் யார்வேண்டுமானாலும் புகார்களை அளிக்கலாம் என ஏற்கனவே நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார். வரக்கூடிய நாட்களில் சூரப்பா மீதான விசாரனை வேகமெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...