![]() |
’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரைPosted : வியாழக்கிழமை, நவம்பர் 14 , 2019 01:04:10 IST
பிரதமர் மோடியை திருடன் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்தியை எச்சரித்து உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.
பிரதமர் மோடியை உச்சநீதிமன்றமே திருடன் என்று குறிப்பிட்டது என்று ராகுல் காந்தி பேசியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீதிமன்றத்தின் தீர்ப்பை பற்றி பேசுகையில் எதிர்காலத்தில் ராகுல் காந்தி எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் இவ்வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
ராகுல் காந்தி மீது பாஜக எம்பி மீனாட்சி லெக்ஹி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
|