???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம்! 0 நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து! 0 லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்! 0 பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு 0 சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம்! 0 நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி 0 நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் 0 CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் 0 பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை! 0 விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு 0 மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 0 சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் 0 ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் 0 பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு 0 புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   16 , 2015  22:09:11 IST


Andhimazhai Image

அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆகம விதிகளை பின்பற்றுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36,000 கோவில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்று அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோவில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2006ம் ஆண்டில் விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இதனிடையே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை 207 பேருக்கு ஆலயங்களில் பூஜை செய்யும் பயிற்சியை அளித்து, அவர்களை நியமனத்துக்கு தயாராக வைத்தது. உச்சநீதிமன்றம் இடைக்கால தடையால் இந்த 207 பேரை கோவில்களில் தமிழக அரசால் நியமிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது. ஆகம விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...