???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தார்கொள்முதல் வழக்கு : நான்கு வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: வைகோ அறிக்கை! 0 டெங்குவை சுகாதாரப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 ராஜினாமா செய்யவில்லை: திருநாவுக்கரசர் மறுப்பு 0 பெங்களூருவில் மெர்சல் திரையிடல் நிறுத்தம் 0 பணிமனை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.7.5 லட்சம் நிவாரணம் : முதலமைச்சர் அறிவிப்பு 0 போக்குவரத்து கழக கட்டிட விபத்து: அமைச்சர் ஓ. எஸ். மணியனை முற்றுகையிட்ட மக்கள் 0 ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் 0 சுகாதார சீர்கேட்டால் உயிரிழப்போர் எண்ணிக்கை: இந்தியாவுக்கு முதலிடம்! 0 'மெர்சல்' வசூல் சாதனை! 0 மெர்சல் பட வசனங்களில் உண்மையில்லை: பொன்.ராதகிருஷ்ணன் 0 நிலவேம்பு கசாயத்தை ஆய்வு செய்திருக்கிறோம்: சுகாதார செயலர் 0 "நடிகர் கமல்ஹாசன் மருத்துவரா? விஞ்ஞானியா?" 0 அரசு போக்குவரத்து கழக கட்டிடம் இடிந்து விபத்து: 8 பேர் பலி 0 முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மருத்துவப்படிப்பில் 85 % இட ஒதுக்கீடு : தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2017  06:35:11 IST

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85% மருத்துவ உள் இடஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
 
 
 
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் ஜூன் 22-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து  சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர் உள்ளிட்ட சிலர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், ''சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு வெறும் 15 சதவீத இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறிவிட்டு தற்போது மாநில வழிக்கல்வி, மத்திய வழிக்கல்வி என மாணவர்களை பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது. எனவே கடந்த ஜூன் 22-ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்'' என கோரியிருந்தனர்.
 
 
தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, 85 சதவீத உள் ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என்று உத்தரவிட்டனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...