???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி 0 அ.ம.மு.கவை அங்கிகரித்தது தேர்தல் ஆணையம்! 0 இனி 24x7 நேரமும் NEFT பரிவர்த்தனை செய்யலாம்! 0 டெல்லியில் தீவிபத்து: 32 பேர் உயிரிழப்பு 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொன்.மாணிக்கவேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   02 , 2019  05:23:25 IST

தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்குக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
 
பதவிக்காலம் முடிந்ததால் சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை பொன்.மாணிக்கவேல் ஏடிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டுமென தமிழக உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும், தமிழக அரசு மீது அவர் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
 
இதுதொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது, உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஆவணங்களை யாரிடமும் ஒப்படைக்க முடியாது என்று பொன். மாணிக்கவேல் தரப்பில் வாதிடப்பட்டது.
 
தமிழக அரசு தனது வாதத்தில், பொன்.மாணிக்கவேல் இனியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக தொடரக்கூடாது. அவருக்கு பதிலாக வேறு ஒரு அதிகாரியை நியமிக்கிறோம் என கூறியது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசு மீது உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. இதேபோல், சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க அவருக்கு உத்தரவிட்டது.
 
மேலும், பொன். மாணிக்கவேல் பதவியை நீட்டிக்கக் கோரிய டிராபிக் ராமசாமியின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...