???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி! 0 அனுமதி இல்லாமல் உள்ளே வரக்கூடாது: சிபிஐக்கு ஆந்திர அரசு தடை 0 கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் மோடி விசாரிப்பு 0 புயலில் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு 0 கஜா புயலால் 12,000 மின் கம்பங்கள் பாதிப்பு: அமைச்சர் தங்கமணி தகவல் 0 கஜா புயல்: 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை 0 கஜா புயல் பாதிப்புகளை வேதாரண்யம் செல்கிறார் மு.க. ஸ்டாலின் 0 புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: ராமதாஸ் 0 பத்து மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல்! 0 கஜா புயலுக்கு இதுவரை 20 பேர் பலி 0 கரையைக் கடந்தது கஜா புயல்! 0 கஜா புயல்: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! 0 அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ‘நியூஸ் ஜெ’ தொடக்கம்! 0 சபரிமலையில் பெண்களுக்கு தனியாக நாட்களை ஒதுக்க கேரள அரசு திட்டம் 0 இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவிரி அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted : புதன்கிழமை,   மே   16 , 2018  09:06:03 IST

மத்திய அரசு அமைக்கவுள்ள காவிரி அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது தமிழகம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை விவரங்கள் பின்வருமாறு:

  • வரைவு செயல் திட்டக் குழுவின் தலைமையகம் பெங்களூரில் இருக்கக் கூடாது என்றும் தலைநகர் டெல்லியில் இருக்க வேண்டும் என்றும் வரைவு செயல் திட்டக் குழுவை காவிரி மேலாணமை வாரியம் என அழைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
  • காவிரி விகாரத்தில் மத்திய அரசின் முடிவே இறுதியானது என்ற விதியை எதிர்த்து புதுச்சேரி அரசு வாதிட்டது.
  • கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

 

விரணைக்குப் பின்னர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டதாவது:  குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற விதியை மாற்றவேண்டும். காவிரி குழுவிற்கான முடிவுகளை மத்திய அரசே எடுக்க முடியாது. செயல் வரைவு திட்டக் குழு தனது முடிவுகளை செயல்படுத்த மத்திய அரசின் உதவியைக் கோரலாம். செயல் வரைவு திட்டக் குழுவின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும். மேலும், இந்த உத்தரவினை ஏற்று வரைவு செயல் திட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்து நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...