???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   14 , 2019  23:11:42 IST

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

விஜய்சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த வேடத்துக்காக பல மணிநேரம் மேக்கப் போட்டு நடித்தார். அவரது தோற்றத்துக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்தநிலையில் சூப்பர் டீலக்ஸ் படம் வருகிற 27-ந்தேதி முதல் ஜூலை 7-ந்தேதி வரை கொரியாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. வேர்ல்டு பெண்டாஸ்டிக் ப்ளூ பிரிவில் இந்தப் படத்தை திரையிடுகின்றனர். மேலும் இந்த திரைப்பட விழாவில் கல்லிபாய், அந்தாதுன் ஆகிய பிற இந்திய மொழி படங்களும் திரையிடப்படுகின்றன. ஏற்கனவே கனடா நாட்டின் மாண்ட்ரீல் நகரில் ஜூலை 11-ந்தேதி முதல் ஆகஸ்டு 1-ந்தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் சூப்பர் டீலக்ஸ் தேர்வாகி உள்ளது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...