???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் 0 ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி! 0 கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது! 0 கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை! 0 குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் 0 கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது! 0 மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் 0 கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது! 0 சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல்கட்ட வாக்குபதிவு! 0 பணமதிப்பிழப்பும் ஜிஎஸ்டியும் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளின: ரகுராம் ராஜன் 0 ஜனவரியில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மக்களவையை சுமூகமாக நடத்த ஒத்துழையுங்கள்: எம்.பி.க்களுக்கு வேண்டுகோள்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   10 , 2018  23:08:18 IST

நடப்பு மக்களவையின் கடைசி ஆண்டு தொடங்கியுள்ளது. இன்னும் 3 கூட்டத்தொடர்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்து எம்.பி.க்களும் கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்த கடிதத்தில், 'நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயில் போன்றது. அதன் புனிதம் மற்றும் கவுரவத்தை காப்பாற்றும் பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அனைத்து உறுப்பினர்களின் செயல்பாடுகளையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
 
கடந்த காலங்களில் உறுப்பினர்களின் போராட்டங்களால், அவை நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கின. வருங்காலங்களில் உறுப்பினர்கள் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும்.  இன்னும் 3 கூட்டத்தொடர்களே மீதம் உள்ளன. ஆனால் முடிக்க வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்கின்றன. எனவே மக்களவையை அமைதியாக நடத்துவதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என சுமித்ரா மகாஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இதனிடையே, மழைக்காலக் கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக, வருகிற 17-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...