???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் உயிரிழப்பு 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தேசிய விருது கொடுக்கும் அளவுக்கு பாரம் படத்தில் என்ன இருக்கு?

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2019  05:38:32 IST


Andhimazhai Image
இந்த ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதை 'பாரம்' பெற்றிருக்கிறது. ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கியுள்ள இப்படம் 'தலைக்கூத்தல்' எனும் கருணைக்கொலை முறையை கதைக்கருவாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரதான இரு கதாபாத்திரங்களில் ராஜு, சுகுமார் சண்முகம் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
 
'பாரம்' திரைப்படத்தின் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமியிடம்  பேசினோம்: "அதிக பட்ஜெட், பிரம்மாண்டம் போன்றவை இல்லாமல் எளிமையாக உருவாக்கப்பட்ட எங்களது 'பாரம்' திரைப்படத்திற்கு தமிழின் சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. படத்தை உருவாக்கி முடித்த பிறகு, பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிட்டதன் மூலம் அங்கீகாரம் கிடைத்தது. எனினும், திரையரங்கில் வெளியிடுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கைகூடவில்லை. இப்போது தேசிய விருது கிடைத்திருப்பதன் மூலம் திரையரங்கில் வெளியிடுவதற்கான சூழல் கனிந்திருப்பதாக பார்க்கிறோம். 'பாரம்' திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் இந்த தேசிய விருது, எங்களைப்போல் குறைந்த பொருட்செலவில் திரைப்படத்தை உருவாக்குபவர்களும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் வழங்கியிருக்கிறது. மக்களுக்கான படைப்புகளுக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்குமென்ற உறுதியை இது உணர்த்துகிறது" என்றார்.
 
'பாரம்' திரைப்படத்திற்குள் நடிகர்கள் தேர்வு இயக்குநராக வந்து, பின்னர் முதன்மை பாத்திரம் ஒன்றை ஏற்று நடித்தவர் சுகுமார் சண்முகம். இவர் பெங்களூரு என்.எஸ்.டி-யில் நடிப்புக்கான ஒராண்டு சிறப்பு பயிற்சியை முடித்த பிறகு, புதுவை பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத்துறையில் (Performing Arts) ஆராய்ச்சி மாணவனாக இருக்கிறார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'அரவான்', 'பேலியோ' உட்பட 15 நாடகங்களை இயக்கியுள்ளார்.
 
 
 
"தமிழில் இது முதல் படம் என்றாலும் திரைப்பட துறையில் அனுபவம் வாய்ந்தவர் ப்ரியா கிருஷ்ணசாமி. தேசிய விருது பெற்ற ஆவணப்படம் ஒன்றையும், இந்தி மற்றும் மராத்தி மொழியில் உருவான 'கங்குபாய்' திரைப்படத்தையும் அவர் இயக்கியுள்ளார். தமிழகத்தில் மறைமுகமாக கடைபிடிக்கப்படும் 'தலைக்கூத்தல்' எனும் முறையை ப்ரியா கிருஷ்ணசாமி அறிந்திருக்கிறார். இதனை கதைக்களமாக கொண்டு ஆவணப்படம் உருவாக்க வேண்டுமென்பதே அவரது எண்ணமாக இருந்தது. பின்னர் இதனை யதார்த்தமான திரைப்படமாக்க அவர் தீர்மானித்தபோதுதான் இப்படத்தின் நான்  இணைந்தேன். நடிகர்கள் தேர்வு இயக்குநராக (Casting Director) இப்படத்தில் இணைந்த நான், பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. முதலில் நடிப்பு பயிற்சி இயக்குநராக மட்டுமே இப்படத்தின் மீதான எனது கவனம் இருந்தது. அதனோடு வீரா எனும் கதாபாத்திரத்தில் நடிக்க ப்ரியா கிருஷ்ணசாமி எனக்கு உறுதுணையாக இருந்தார்.
 
மற்றொரு பிரதான பாத்திரத்தில் புதுவை பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத்துறையின் முன்னாள் தலைவர் ராஜு நடித்திருக்கிறார். அவர் மூலம் தான் எனக்கு இப்படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.
 
வெளிப்படையாக தெரியாவிட்டாலும் 'தலைக்கூத்தல்' முறை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. வயது முதிர்ந்து மரணத்தோடு போராடுபவர்கள், நோய்வயப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருப்பவர்களின் வாழ்வை தலைக்கூத்தல் முறையில் முடித்து வைக்கிறார்கள். இதனை அழுத்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் பதிவு செய்த விதத்தில் 'பாரம்' முக்கியமான திரைபடமென நினைக்கிறேன். அதற்கு தேசிய விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது," என்றார் சுகுமார்.
 
-வசந்தன்

English Summary
Sugumar shanmugam talks about baram

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...