???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்! 0 மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல்! 0 காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் 0 மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு! 0 பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் 0 மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 0 உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை 0 உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி! 0 உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா! 0 சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 0 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத்! 0 ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் 0 காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி! 0 தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன?: நீதிபதி கிருபாகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

10 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய வருமான வரியைக் கைவிட வேண்டும்: சுப்பிரமணியசாமி

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   11 , 2018  00:15:18 IST

பொருளாதார வளர்ச்சியை 10 சதவீதமாக உயர்த்த, சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில், வருமான வரி விதிப்பை இப்போதே கைவிட வேண்டும் என டெல்லி மேல்-சபை எம்.பி. சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பான ‘அசோசெம்’ 98-வது நிறுவன தினம் டெல்லியில் நடைபெற்றது. அதில், பா.ஜனதா மூத்த தலைவரும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி கலந்து கொண்டு பேசியதாவது: ’’உள்நாட்டு சேமிப்புதான் 10 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடிக்க உதவும். வெளிநாட்டு முதலீடு அதற்கு உதவாது. பொருளாதார வளர்ச்சியை 10 சதவீதமாக உயர்த்த, சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில், வருமான வரி விதிப்பை இப்போதே கைவிட வேண்டும். வருமான வரியை கைவிடுவதால் ஏற்படும் இழப்பை நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் ஈடு கட்டலாம். ஜி.எஸ்.டி. வரி, ஒரு பேரழிவு. பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட விதம் சரியல்ல. போதுமான ரொக்கம் கையில் கிடைக்க ஏற்பாடு செய்யாமல் விட்டு விட்டனர்.’’ இவ்வாறு சுப்பிரமணிய சாமி பேசினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...