???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நான் பிராமணர்;சவுகிதார் ஆக முடியாது: சுப்பிரமணியன் சாமி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   24 , 2019  22:41:00 IST

பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி சர்ச்சைக் கருத்துக்களுக்கு பெயர் போனவர். கட்சியின் முடிவுகளில் எப்போதும் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் இவர், தீவிர தேர்தல் அரசியலிலும் ஈடுபடுவது இல்லை. கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “பொருளாதாரம் குறித்து மோடி, அருண் ஜெட்லிக்கு எதுவும் தெரியாது” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
 
இந்நிலையில், தமிழ் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் சமீபத்திய பாஜகவின் யுக்தியான சவுகிதார் குறித்தும் பேசியுள்ளார்.
 
“அமித் ஷா முதல் அனைத்து பாஜக தலைவர்களும் சவுகிதார் (காவலன்) என்று பெயருக்கு முன் அடைமொழி சேர்த்துள்ளனர். நீங்கள் சேர்க்கவில்லை?” என்று கேள்வி கேட்க, “நான் சவுகிதார் இல்லை. நான் பிராமணர்... சவுகிதார் ஆக முடியாது. நான் கருத்து கொடுப்பேன். அந்த கருத்தின் பிரகாரம் சவுகிதாருக்கு வேலை செய்வேன்” என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
 
மேலும், ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார். வந்தால் ஜெயிலுக்கு போவார்” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...