???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'குடியுரிமை சட்டம் தமிழர்களுக்கு எதிரானது': சு. வெங்கடேசன்

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   10 , 2019  01:19:31 IST


Andhimazhai Image

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிரானது என்று மக்களவையில் எம்பி வெங்கடேசன் உரையாற்றியுள்ளார்.

 

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சு. வெங்கடேசன் பேசுகையில் ‘இந்தியாவை அடுத்த பல ஆண்டுகள் அலைக்கழிக்கப்போகிற மிக கொடிய ஒரு சட்டம் இது. ஒரு மதச்சார்பற்ற நாடு மத அடிப்படையில் குடியுரிமை வழங்கிட முடியாது. அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒரு சட்டத்திருத்தம் இது.” என்று குறிப்பிட்டார். அவர் மேலும் பேசியதாவது:  

 

“இந்தியா இதுவரை கடைபிடித்து வந்த மரபுகளுக்கு எதிரானது. இந்திய அரசியல் முகப்புரையில் வழிபாட்டை வைத்து மக்களை வேறுபடுத்தவில்லை. ஆனால் இன்றைக்கு இந்தச் சட்டம் நிறைவேறினால் இந்தியா தனது மனிதாபிமானம்மிக்க கோட்பாட்டினை அதிகாரப்பூர்வ்மாக கைவிடுகிற ஒரு கொடிய நாளாக இருக்கும் என்று நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

 

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் முஸ்லிம் அல்லாத மக்கள் மதரதியாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. ஆனால் அது மட்டும் தானா ஒடுக்கப்படுவதற்கான கருவி என்பதை இங்கே நான் நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். அஹம்தியாஸ் உள்ளிட்ட பல குழுக்கள் அங்கே ஒடுக்கப்படுகிறார்கள், மலாலா ஏன் துரத்தப்பட்டார் என்பது உலகம் அறியும் . வன்முறைக்கு மதம் மட்டுமே அளவுகோல் இல்லை. மதத்தின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்க இயலாது. எந்த மதத்தையும் பின்பற்றாத கடவுள் நம்பிக்கை அல்லாத நாத்திகர்களைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் கேட்க விரும்புகிறேன். மியான்மரைப்பற்றி இலங்கையைப் பற்றி நீங்கள் ஏன் பேச மறுக்கிறீர்கள்?

 

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கான அடிப்படை ”சிங்கள பௌத்த பேரினவாதம்” என்பதையும் நாம் அறிவோம் எனவே இன்றைக்கு தமிழ்நாட்டில் 24 மாவட்டத்தில் 107 முகாமில் 59716 பேர் இருக்கிறார்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறார்கள், இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களைப்பற்றியெல்லாம் நீங்கள் ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள்.

 

இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது, தமிழர்களுக்கு எதிரானது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம். இந்த சட்டத்திருத்தம் அண்டை நாடுகளில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் வெளிப்படையாக அழைப்பு கொடுக்கிறது, அதே நேரம் உள்நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு நேரடியான அச்சுறுத்தலையும் அவமானத்தையும் கொடுக்கிறது என்பதை நாங்கள் இந்த அவையில் பதிவு செய்கிறோம். நாட்டில் எழும் எத்தனையோ பிரச்சினைகளை தீர்வு காண்பதற்கு பதிலாக எண்ணற்ற புதிய பிரச்சினைகளை உருவாக்குகிற் சட்டமாக இந்த சட்டம் இருக்கிறது.

 

இங்கே உள்துறை அமைச்சர் சொன்னார் அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு ஆளுகிற அதிகாரத்தை மக்கள் எங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்று சொன்னார்.

 

உண்மை ஆளுகிற அதிகாரத்தை தான் மக்கள் உங்களுக்கு வழங்கியிருக்கிறார்களே தவிர இந்தியாவை பிளக்கிற அதிகாரத்தை, வெறுப்பின்பால் இந்தியாவை மோசமான நிலைக்கு செலுத்துகிற அதிகாரத்தை உமக்கு வழங்கவில்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.”

 

இவ்வாறு அவர் உரையாற்றினார். click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...