அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வீதிகளில் வீசப்படும் ஏர் இந்தியா ஊழியர்கள்: சு.வெங்கடேசன் கண்டனம்

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   15 , 2021  15:12:26 IST

ஏர் இந்தியா ஊழியர்கள் 6 மாதத்தில் நிறுவன குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்றும்  இல்லையேல் ரூ. 15 லட்சம் அபராதத்துடன் இரண்டு மடங்கு வாடகை செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
இந்தியாவின் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், அதனை தொடங்கி நடத்திய டாட்டா குழுமத்தின் கைகளுக்கே சென்றுள்ளது. 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமத்திடம் மத்திய அரசு விற்பனை செய்தது. இதனை மத்திய அரசும், டாட்டா நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் விலைக்கு வாங்கியுள்ள நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான தங்கும் இடங்களைகாலி செய்ய வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதை கண்டித்து நவம்பர் மாதத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
 
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய விமான போக்குவரத்து  அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,  ஏர் இந்தியா நிறுவனத்தை கைமாற்றும் ஒப்பந்தம் கையெழுத்தான ஆறு மாதங்களுக்குள் ஊழியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சுமார் 7 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  அவ்வாறு குடியிருப்புகளை காலி செய்யவில்லை என்றால்  ரூ. 15 லட்சம் அபராதத்துடன் இரண்டு மடங்கு வாடகை செலுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்த ஊழியர்கள் ஏர் இந்தியாவின் வளர்ச்சிக்கு தற்போதுவரை பங்கேற்றி கொண்டிருப்பவர்கள்.  அவர்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும். தனியார்மயம் குறித்து கருத்து கூறுவது என நோக்கம் அல்ல. ஆனால், தனியார் மயத்துக்கு பின் ஊழியர்களின் நிலை என்ன என்பதை நிர்வாகத்தின் அணுகுமுறை காட்டுகிறது.  அவர்களின் மதிப்புக்கு  சவால் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று கேட்டுகொண்டுள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...