???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி! 0 அனுமதி இல்லாமல் உள்ளே வரக்கூடாது: சிபிஐக்கு ஆந்திர அரசு தடை 0 கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் மோடி விசாரிப்பு 0 புயலில் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு 0 கஜா புயலால் 12,000 மின் கம்பங்கள் பாதிப்பு: அமைச்சர் தங்கமணி தகவல் 0 கஜா புயல்: 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை 0 கஜா புயல் பாதிப்புகளை வேதாரண்யம் செல்கிறார் மு.க. ஸ்டாலின் 0 புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: ராமதாஸ் 0 பத்து மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல்! 0 கஜா புயலுக்கு இதுவரை 20 பேர் பலி 0 கரையைக் கடந்தது கஜா புயல்! 0 கஜா புயல்: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! 0 அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ‘நியூஸ் ஜெ’ தொடக்கம்! 0 சபரிமலையில் பெண்களுக்கு தனியாக நாட்களை ஒதுக்க கேரள அரசு திட்டம் 0 இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள்

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   21 , 2018  04:28:55 IST

அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை மாணவர்கள் தடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள வெள்ளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் பகவான், சுகுணா ஆகியோருக்கு நேற்று முன்தினம் பணி மாறுதல் வழங்கப்பட்டது. ஆனால், ஆங்கில ஆசிரியர் பகவானை பணி மாறுதல் செய்யக் கூடாது என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  வலியுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக, பள்ளி முன் திரண்ட மாணவர்கள், தங்களுக்கு அதே ஆசிரியர் தான் பாடம் நடத்த வேண்டும் எனக் கூறி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று பணி மாறுதல் ஆணையைப் பெற பள்ளிக்கு சென்ற ஆசிரியர் பகவானை பள்ளியில் இருந்து வெளியே செல்லவிடாமல் சூழ்ந்த மாணவர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். எவ்வளவோ சமாதானம் செய்தும் மாணவர்கள் கேட்கவில்லை. ஒருசில மாணவர்கள் ஆசிரியர் பகவானை வெளியே விடாமல் அழுது அடம்பிடித்த காட்சி, உருக்கமாக இருந்தது. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதனை அறிந்த  முதன்மை கல்வி அதிகாரி ஆசிரியர் பகவானை மேலும் 10 நாட்கள் அதே பள்ளியில் தொடர்ந்து பணி செய்ய அனுமதி வழங்கினார். இதுகுறித்து மாநில கல்வித்துறை இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது ஆலோசனை பெற்ற பிறகு ஆவன செய்யலாம் என கூறினார். இதையடுத்து ஆசிரியர் பகவானின் பணி மாறுதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...