???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டியா? கண்டனம்

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   19 , 2019  02:22:11 IST

தேர்வில் மாணவர்கள் பார்த்து எழுதுவதை தடுக்க வித்தியாசமான வழியை கண்டுபிடித்துவிட்டோம் என்ற நினைப்பில், கர்நாடக தனியார் கல்லூரியில் மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியை கவிழ்த்ததற்கு எதிர்ப்பு வலுத்திருக்கிறது.
 
அம்மாநிலத்தின் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பகத் பியூ கல்லூரியில் தான் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி அந்த கல்லூரியில் தேர்வு நடைபெற்றுள்ளது. அப்போது மாணவர்கள் பிறரின் தாளை பார்த்து எழுதக் கூடாது என்பதற்காக, அனைத்து மாணவர்கள் தலையிலும் அட்டைபெட்டியை கவிழ்த்து, அதோடு தேர்வு எழுத வைத்துள்ளனர்.
 
மாணவர்கள் தங்களது விடைத்தாளை மட்டும் பார்க்கும் அளவுக்கு ஓட்டைபோட்டு தலையில் கவிழ்க்கப்பட்ட அட்டையுடன் தேர்வு எழுதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வந்தன.
 
பலரும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர்களை கல்லூரி ஆசிரியர்கள் இழிவுபடுத்தியதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுபுரியாத கல்லூரி நிர்வாகம், இந்த வழிமுறைக்கு வரவேற்பு கிடைத்தால், இனி அனைத்து தேர்வுகளிலும் இதே பாணி பின்பற்றப்படுமென்று வேறு கூறியிருக்கிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...