???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி! 0 சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம்! 0 ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை! 0 ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி 0 ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி! 0 குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு 0 வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 0 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு 0 சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் 0 மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா? கார்த்தி சிதம்பரம் கேள்வி 0 ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் 0 ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   22 , 2020  20:27:12 IST

மாணவர் சேர்க்கை விவரத்தை 7-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
 
அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019-20-ம் கல்வியாண்டில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையையும், அதேபோல் 2020-21-ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரையில் வருகிற 30-ஆம் தேதி வரை நிலவரப்படி சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையையும் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
 
பள்ளிக்கல்வி இயக்குனரின் மின்னஞ்சல் முகவரிக்கு, தொகுத்து வைத்திருக்கும் இந்த தகவல்களை அடுத்த மாதம் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்கும்படி அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...