???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி 0 அ.ம.மு.கவை அங்கிகரித்தது தேர்தல் ஆணையம்! 0 இனி 24x7 நேரமும் NEFT பரிவர்த்தனை செய்யலாம்! 0 டெல்லியில் தீவிபத்து: 32 பேர் உயிரிழப்பு 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேர் மீது போக்சோ சட்டம்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   டிசம்பர்   01 , 2019  23:02:44 IST

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி தனது பிறந்தநாளை கொண்டாட தனது நெருங்கிய நண்பர் உள்பட ஆறுபேர் கொண்ட கும்பலுடன் ஐஸ்வர்யா நகர் குழந்தைகள் பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியின் நெருங்கிய நண்பனான மணிகண்டன், அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை மற்றொரு நண்பர் தனது செல்போனில் படம் எடுக்க, மற்ற நான்கு பேரும் யாரும் வருகிறார்களா என்று காவல் காத்துள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த விவரங்களை தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரினை அடுத்து, கோவை ஆர்.எஸ்.புரம் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவியின் நண்பர்கள் ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயண மூர்த்தி ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி மணிகண்டன் மற்றும் அவனது நண்பர் பப்ஸ் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். ஐஸ்வர்யா நகர் குழந்தைகள் பூங்காவின் ஒரு பகுதியில் புதர் மண்டி கிடப்பதால் அங்கு யாரும் வருவதில்லை. எனவே மாணவியை திட்டம் போட்டே அழைத்து சென்றுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...