???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி! 0 அனுமதி இல்லாமல் உள்ளே வரக்கூடாது: சிபிஐக்கு ஆந்திர அரசு தடை 0 கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் மோடி விசாரிப்பு 0 புயலில் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு 0 கஜா புயலால் 12,000 மின் கம்பங்கள் பாதிப்பு: அமைச்சர் தங்கமணி தகவல் 0 கஜா புயல்: 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை 0 கஜா புயல் பாதிப்புகளை வேதாரண்யம் செல்கிறார் மு.க. ஸ்டாலின் 0 புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: ராமதாஸ் 0 பத்து மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல்! 0 கஜா புயலுக்கு இதுவரை 20 பேர் பலி 0 கரையைக் கடந்தது கஜா புயல்! 0 கஜா புயல்: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! 0 அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ‘நியூஸ் ஜெ’ தொடக்கம்! 0 சபரிமலையில் பெண்களுக்கு தனியாக நாட்களை ஒதுக்க கேரள அரசு திட்டம் 0 இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அப்பா நீ குடிக்காம இரு: டாஸ்மாக்கை மூடக்கோரி நெல்லை மாணவன் தற்கொலை!

Posted : புதன்கிழமை,   மே   02 , 2018  01:42:50 IST


Andhimazhai Image

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த +2 மாணவர் தினேஷ் இன்று காலை  ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தனது தந்தையின் தொடர் குடிப்பழக்கம் அவருடைய தற்கொலைக்கான காரணம் என்றும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

 

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த குருவிகுளம் கே.ரெட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் 12ம் வகுப்பு முடித்துவிட்டு, வரும் மே 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நீட் தேர்வு எழுதவிருந்தார். தினேஷின் அப்பா மாடசாமி. இவர் ஒரு குடிநோயாளி. இவரது குடிப்பழக்கத்தால் குடும்பம் அதிகம் பாதிக்கப்பட்டது. குடிப்பழக்கத்தை விடும்படி அப்பாவிடம் கெஞ்சிப் பார்த்தார். சண்டையிட்டுப் பார்த்தார். ஆனால் மாடசாமி குடிப்பழக்கத்தை விடவில்லை. இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த தினேஷ் நெல்லை புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலத்தில் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உருக்கமான தற்கொலைக் கடிதமும் நீட் தேர்வு நுழைவுச் சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. எழுத்துப் பிழைகளுடன் கூடிய அந்தத் தற்கொலைக் கடிதம் குடியால் சீரழியும் தமிழ்க் குடும்பங்கள் குறித்தான ஒரு மகத்தான துயர ஆவணம்.   

 

தற்கொலைக் கடிதத்தில் தினேஷ் ‘‘அப்பா நான் தினேஷ் எழுதறது. நா  செத்துப் போனதுக்கு அப்புறமாவது நீ குடிக்காம இரு. நீ குடிக்கறதால எனக்கு கொள்ளி வைக்காதே. மொட்ட போடாத. Open-ஆ சொன்னா நீ எனக்கு காரியம் பண்ணாத. மணி அப்பாதான் பண்ணணும். இதுதான் என் ஆச. அப்பதான் என் ஆத்மா சாந்தியடையும்.’’ என உருக்கமாக எழுதியுள்ளார்.    

 

மேலும் தனது கடிதத்தில் டாஸ்மாக்  மதுபான கடைகளை பிரதமர் மற்றும் முதல்வர் தலையிட்டு மூட வேண்டும் எனவும் தினேஷ் குறிப்பிட்டிருக்கிறார். அப்படி மூடவில்லையென்றால், தான் ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தேசிய மாநில நெடுஞ்சாலையையொட்டிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு 5000 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறி மேல் முறையீடு செய்துள்ளது. நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு. குடியின்றி அமையாது உலகு என்பது நம் அரசின் போக்கு. டாஸ்மாக் வருமானம் இல்லையெனில் தமிழக அரசு தள்ளாடும் என்பதுதான் யதார்த்தம் எனில் தினேஷின் மரணத்துக்கு யார் பொறுப்பேற்பது?

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...