???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள்! மோடி வேண்டுகோள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம்! 0 அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா! 0 ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 0 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி 0 நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு! 0 கொரோனா பயத்தால் சாத்தூரில் ஒருவர் உயிரிழப்பு 0 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   20 , 2020  21:59:47 IST

கர்நாடக மாநிலம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல, பெங்களூரு சுதந்திர பூங்காவிலும் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஓவைசி எம்.பி.யும் அழைக்கப்பட்டு இருந்தார்.

போராட்டத்திற்காக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஓவைசி எம்.பி., மாநகராட்சி கவுன்சிலர் இம்ரான் பாட்ஷா மற்றும் நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு கல்லூரி மாணவியை, மேடைக்கு வந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேச அழைத்தனர்.

இந்த நிலையில், மேடையில் ஏறிய அந்த மாணவி திடீரென்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் வாழ்க, வாழ்க... என்று கோஷமிட்டபடி இருந்தார். அந்த மாணவி பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதை கேட்டதும் மேடையில் இருந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஓவைசி எம்.பி. உள்ளிட்டோர் மாணவியின் அருகே சென்று, அவர் கையில் இருந்த மைக்கை பிடுங்க முயன்றனர். ஆனால் அவர் மைக்கை கொடுக்க மறுத்து விட்டார். மாறாக இந்தியாவுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டார். ஆனாலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாணவி கோஷமிட்டதால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அவரை பிடித்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.

பின்னர் உப்பார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவை சேர்ந்த அமுல்யா லியோனா(வயது 19) என்பதும், கல்லூரி ஒன்றில் பி.ஏ. படித்து வருவதும் தெரிந்தது. மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் அவர் கலந்து கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. என்றாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமுல்யா கோஷமிட்டதால், அவர் மீது உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்கள். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...